»   »  மெயின் ஏரியாவில் ரூ.20 கோடிக்கு பங்களா வாங்கிய சர்ச்சை நடிகை

மெயின் ஏரியாவில் ரூ.20 கோடிக்கு பங்களா வாங்கிய சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பையின் முக்கிய பகுதியில் ரூ. 20 கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகளில் கங்கனா ரனாவத்தும் ஒருவர். படத்திற்கு ரூ.12 கோடி வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பங்களா

பங்களா

மும்பை பந்த்ரா, பாலி ஹில் பகுதியில் மூன்று அடுக்குமாடி கொண்ட பெரிய பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார் கங்கனா. அந்த பங்களாவின் விலை தான் பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

ரூ. 20 கோடி

ரூ. 20 கோடி

பங்களாவுக்கு ரூ. 20.7 கோடி கொடுத்துள்ளார் கங்கனா. ஒரு சதுர அடிக்கு ரூ.67 ஆயிரம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி தான் பங்களாவை தனது பெயரில் பதிவு செய்துள்ளார் கங்கனா.

இயக்கம்

இயக்கம்

3 தேசிய விருதுகள் வாங்கியுள்ள கங்கனாவுக்கு எதிர்காலத்தில் படங்களை இயக்கவும் திட்டம் உள்ளது. அவர் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

கங்கனா படங்களில் பிசியாக இருந்தாலும் அவருக்கும், முன்னாள் காதலரான நடிகர் ரித்திக் ரோஷனுக்கும் இடையேயான சண்டை ஓய்ந்தபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Kangana Ranaut purchased a brand new three-storey bungalow in Pali Hill, Bandra and reports state that she paid a whopping Rs 20.7 Crores to be the owner of it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil