»   »  திலீப் செய்தது போன்று அந்த ஹீரோவும் செய்துவிடுவாரோ: பயத்தில் நடிகை

திலீப் செய்தது போன்று அந்த ஹீரோவும் செய்துவிடுவாரோ: பயத்தில் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் திலீப் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதில் பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்தனர்.

இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா ரித்திக் பற்றி கூறியிருப்பதாவது,

ராகேஷ் ரோஷன்

ராகேஷ் ரோஷன்

எனக்கும், ரித்திக் ரோஷனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட பிறகு அவரது தந்தை ராகேஷ் ரோஷனை அணுகி இதை தீர்த்து வைக்குமாறு கூறினேன். நான் ரித்திக்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அவரும் தெரிவித்தார்.

ஓட்டம்

ஓட்டம்

ராகேஷ் ரோஷன் தெரிவித்த சந்திப்பு இன்னும் நடக்கவில்லை. என்னை பார்த்தாலே ரித்திக் ரோஷன் தலை தெறிக்க ஓடுகிறார். அதன் பிறகு எங்கு பிரச்சனையை பேசித் தீர்க்க.

இமேஜ்

இமேஜ்

இமேஜ், குடும்ப வாழ்க்கை, புள்ளைங்க முக்கியம் என்றால் என்னுடன் தொடர்பு வைத்திருந்திருக்கக் கூடாது. எனக்கு பயமாக உள்ளது. மலையாள நடிகர் திலீப் செய்ததை பாருங்கள்.

பெண்கள்

பெண்கள்

நடிகர் திலீப் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பெண்கள் கர்ப்பமாகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், இது போன்ற விஷயங்களால் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயமாக உள்ளது என்கிறார் கங்கனா.

English summary
Bollywood actress Kangana Ranaut said that she fears for her life. She added that," I was scared! Look at what the Malayalam actor (Dileep) did! These things happen.''
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos