அவன் தான நீ?: பாடல் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளருடன் மோதிய ஹீரோயின்

By Siva

Recommended Video

பாடல் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளருடன் மோதிய ஹீரோயின்-வீடியோ

மும்பை: ஜட்ஜ்மென்டல் ஹை கியா பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ஆண் பத்திரிகையாளருடன் சண்டை போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்குமார் ராவ், கங்கனா ரனாவத் வித்தியாசமாக நடித்துள்ள படம் ஜட்ஜ்மென்டல் ஹை கியா. பிரகாஷ் கோவலமுடி இயக்கியுள்ள இந்த படத்திற்கு முதலில் மென்டல் ஹை கியா என்று தான் பெயர் வைத்தார்கள். அந்த தலைப்பால் சர்ச்சை ஏற்பட்டதால் அதை மாற்றுமாறு சென்சார் போர்டு தெரிவித்தது.

Kangana fights with a journo

இதையடுத்து தலைப்பு மாற்றப்பட்டது. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கங்கனா, ராஜ்குமார் ராவ், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கங்கனா பதில் அளித்தார். ஒரு குறிப்பிட்ட ஆண் பத்தரிகையாளர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை பார்த்த கங்கனா, நான் இயக்கிய முதல் படமான மணிகர்னிகாவை மோசமாக விமர்சித்தவர் நீங்கள் என்று குற்றம் சாட்டினார். அதை அந்த பத்திரிகையாளர் மறுக்கவே கங்கனா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

என் படத்திற்கு எதிராக ட்வீட் செய்தவர் தானே நீங்கள் என்று கங்கனா கூற அவரோ நான் அப்படி எதுவும் செய்யவில்லை. மேடையில் இருந்து கொண்டு தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றார்.

மணிகர்னிகா படத்தில் நான் நடித்தபோது நீங்கள் என் வேனுக்கு வந்து 3 மணிநேரமாக பேட்டி எடுத்தீர்கள், என்னுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டீர்கள். எனக்கு மெசேஜ் அனுப்பினீர்கள் என்றார் கங்கனா. இதை கேட்ட பத்திரிகையாளரோ, நான் கங்கனாவுக்கு மெசேஜ் அனுப்பவில்லை. அரை மணிநேரம் தான் பேட்டி எடுத்தேன் என்றார்.

தன்னை பற்றி தவறாக பேசி தன் பெயரை கெடுத்ததாக கங்கனா அந்த பத்திரிகையாளர் மீது குற்றம் சாட்டினார். இசை வெளியீட்டு விழாவில் கங்கனா பத்திரிகையாளருடன் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சண்டையின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவரின் அக்கா ரங்கோலி பாலிவுட் பிரபலங்கள் பலரை ட்விட்டரில் விளாசிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கங்கனா வேறு சண்டை போட்டுள்ளதால் அக்காவும், தங்கையும் சரியான சண்டக்கோழிகளாக இருக்கிறார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X