ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்
மும்பை: ரங்கூன் படத்தில் நடிக்கும்போது ஷாஹித் கபூர் மற்றும் சயிப் அலி கானுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க சிரமப்பட்டாராம் கங்கனா ரனாவத்.
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் கங்கனா ரனாவத், ஷாஹித் கபூர், சயிப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் ரங்கூன். இந்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது.
படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காதல் கதை
இரண்டாம் உலகப் போரின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். ஒரு நடிகையை ராணுவ வீரர், இயக்குனர் ஆகியோர் காதலிக்கிறார்கள்.

கங்கனா
படத்தில் கங்கனா ஷாஹித் மற்றும் சயிப் அலி கானுடன் நெருக்கமாக வரும் காட்சிகள் உள்ளன. அவர் இரண்டு ஹீரோக்களுக்குமே லிப் டூ லிப் கொடுக்கும் காட்சிகளும் உள்ளன.

கஷ்டம்
ஷாஹித் கபூர் மற்றும் சயிப் அலி கானுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க கங்கனா கஷ்டப்பட்டாராம். இருவரும் மீசை வைத்திருந்தால் முத்தம் கொடுக்கும்போது அது இடைஞ்சலாக இருந்ததாம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

காதல்
திரைப்பட இயக்குனராக நடிக்கும் சயிப் படத்திலும் நடிகையான கங்கனாவை காதலிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது ராணுவ வீரரான ஷாஹித் கபூர் கங்கனா மீது காதல் வயப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











