நடன தாரிகையாக மாறும் கங்கனா - குருவாக காயத்ரி ரகுராம்

தலைவி படத்திற்காக தயாரிக்கொண்டிருக்கும் கங்கனா

தலைவி படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கும் கங்கனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மய்யமாய் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கின்றனர் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் சய்லேஷ்.ஆர்

kangana practice barathnatyam with bigboss fame gayathri raghuram

இப்படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் .அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருதாக தெரிகிறது . கங்கனா ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியாய் செய்ய கூடியவர்.மணிகர்னிகா படத்திற்காக வால் பயிற்சி சண்டை பயிற்சி எல்லாம் கற்று தேர்ந்தே படத்தில் நடித்திருந்தார் .அதே போல் தலைவி படத்திற்காகவும் மிக தீவிரமாய் பயிற்சி செய்து வருகிறார் கங்கனா.

கங்கனா நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமானவை. கதைகளை தேர்ந்து எடுப்பதில் கங்கனா வல்லுநர் என்றே சொல்லலாம். கதைகளை சரியாக தேர்ந்து எடுக்காவிட்டால் கங்கனா கண் கானா இடத்திற்கு போய்விடுவார் என்பதை புரிந்து செயல்படுபவர்.

kangana practice barathnatyam with bigboss fame gayathri raghuram

ஒவ்வொரு முயற்சியும் - சரியான பயிற்சியும் எடுத்து கொண்டு தான் களத்தில் இறங்குகிறார் கங்கனா .
பரதத்தை வெறுமனே ஆடி அசைவுகள் காட்டி நடிக்க முடியும், ஆனால் பாவனைகள் மிக முக்கியம் என்று கருதி - பெரிய அளவு குருமார்கள் சென்று கற்று கொண்டால் நாட்கள் அதிகம் ஆகும் என்பதை மனதில் கொண்டு , காயத்ரி ரகுராமிடம் எளிய முறையில் சினிமாவிற்கு ஏற்றார் போலே - தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

காயத்ரியும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் சொல்வதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்- இது போன்ற நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவதே இல்லை. சிறு வயதில் இருந்தே தன் அப்பா ரகுராம் சொல்லி கொடுத்த அத்தனை வித்தைகளையும் சரியான சமயம் வரும் பொழுது சரியாக பயன்படுத்தி கொள்கிறார்.

கங்கனாவும் - காயத்ரியும் நடனத்தில் மிரட்ட வேண்டும் வெற்றி பெற வேண்டும் , இவர்களது அர்ப்பணிப்பு , கலை ஆர்வம் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X