மானத்தை மறைக்கத் தான் உடை: கங்கனா, ப்ரியங்காவை விளாசும் நெட்டிசன்ஸ்
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கனா ரனாவத், ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் அணிந்திருந்த உடையை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர்.
பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தனர்.
கேன்ஸ் திரைப்பட விழா என்றாலே நடிகைகள் உடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். கங்கனா கருப்பு நிற சூட் அணிந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். காரணம் அவர் ரொம்ப ஃப்ரீயா உடை அணிந்துள்ளார்.

கங்கனா ஒரு புறம் அதிர வைக்க ப்ரியங்கா சோப்ராவோ முன்னழகின் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்து வந்தார். உடைகள் அழகாக இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. கங்கனா, ப்ரியங்கா அணிந்த உடைகள் பிரான்சில் ஒரு பெரிய விஷயமே இல்லை.
இருப்பினும் இந்திய ரசிகர்கள் தான் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதற்காக உடை அணிகிறோம் என்பதை மனதில் வைத்து அணிய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications