மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
மும்பை: 'மணிகர்னிகா' படத்தின் 2 ஆம் பாகத்தை, தனது புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே நடிகை கங்கனா எடுக்க இருக்கிறார் என்று எழுத்தாளர் புகார் கூறியுள்ளார்.
நடிகை கங்கனா, தயாரித்து நடித்த படம், மணிகர்னிகா. ஜான்சி ராணியின் கதையை மையமாகக் கொண்ட படம் இது.
நடிகை கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்திருந்தார். இதை கிரிஷ் இயக்கினார்.

அதுல் குல்கர்னி
அவர் பாதியில் விலகியதை அடுத்து நடிகை கங்கனாவே படத்தை இயக்கினார். இந்தப் படம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அதுல் குல்கர்னி, சிஷு சென்குப்தா உட்பா பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை கங்கனா இப்போது அறிவித்துள்ளார்.

மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ்
தற்கு 'மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் முதல் பெண் ஆட்சியாளர் என்று கூறப்படும் திட்டா என்பவர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்க இருக்கிறார். இப்போது இந்தப் படத்துக்கு காப்பி ரைட்ஸ் பிரச்சனை எழுந்துள்ளது.

ராணி ஆஃப் காஷ்மீர்
தான் எழுதிய, திட்டா: தி வாரியர் ராணி ஆஃப் காஷ்மீர் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகுவதாக எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் என்பவர் புகார் கூறியுள்ளார். தனது கதை உரிமையை கங்கனா மீறியிருப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு அதிர்ச்சி
இந்த விவகாரத்தில் கங்கனா ரனாவத் தெரியாமல் இதைச் செய்திருப்பார் என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ள ஆஷிஷ், தேசியவாத உணர்வு கொண்ட, முக்கியப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கிற நடிகை கங்கனா இப்படி நடந்திருப்பது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











