பாலிவுட் 'குயீன்' கங்கனா வீட்டு கதவை தட்டும் இத்தாலி பட வாய்ப்பு
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு இத்தாலிய மொழி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகை கங்கனா ரனாவத்தின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு இருக்கிறது. அது யாருக்கு வேண்டும். அவர் நடிப்பை பற்றி மட்டும் பார்ப்போம்.
பாலிவுட் கான்களுக்கு மத்தியில் நடிப்பில் அசத்தி வருகிறார் கங்கனா.

குயீன்
கங்கனா நடித்த குயீன் படம் சூப்பர் ஹிட்டானது. அதில் அவர் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர்.

இத்தாலி படம்
கங்கனாவின் நடிப்பு கடல் கடந்தும் பேசப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவருக்கு இத்தாலிய மொழி படத்தில் அதுவும் ஹீரியினாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்குமா?

மாஸிமிலியானோ
இத்தாலிய இயக்குனரான எடோர்டோ டி ஏஞ்சலிஸ் தனது படத்தில் நடிகர் மாஸிமிலியானோ காலோவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கங்கனாவிடம் கேட்டுள்ளார். எடோர்டோ, மாஸிமிலியானோ ஆகிய பெயர்களை சொல்ல கஷ்டமாக இருக்கிறதா, சொல்லிப் பார்க்க வேண்டாம். இத்தாலிய மொழி படத்தில் நடிக்க கங்கனாவை அழைத்துள்ளனர். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

டேட்ஸ்
இத்தாலிய படத்தில் நடிக்க என்னை அணுகியுள்ளனர். ஆனால் வரும் 2016ம் ஆண்டு வரை என் கால்ஷீட் நிரம்பி வழிகிறு. அது தான் யோசனையாக உள்ளது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

தனு வெட்ஸ் மனு
மாதவன்(நம்ம மாதவன் தாங்க), கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு இந்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் கங்கனா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தவிர இம்ரான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். கையில் 6 படங்களை வைத்துக் கொண்டிருக்கும் கங்கனா இத்தாலிய மொழி படத்தில் நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











