தீபிகா நடித்த ‘கெஹ்ரையான்‘ படம் மோசமான குப்பை… கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து !
மும்பை : தீபிகா படுகோனே நடித்த கெஹ்ரையான் திரைப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகை கங்கனா ரனாவத் அந்த படம் மோசமான குப்பை என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
தீபிகா, சித்தான்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைர்யா கர்வா, நசீருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோர் நடிப்பில் ஷகுன் பத்ரா இயக்கியுள்ள படம் தான் கெஹ்ரையான்.
இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் அமேஸான் இணைந்து தயாரித்துள்ளது.

கங்கனா ரனாவத்
பாலிவுட் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக விளங்கி தனக்கென தனி வழியை பின்பற்றி வருபவர் கங்கனா ரனாவத். இவர் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி சர்ச்சை நாயகி என்று பெயர் எடுத்துள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சர்ச்சை கருத்தை பகிர்ந்துள்ளார். அது பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

கெஹ்ரையான்
தீபிகா படுகோனே நடித்து பிப்ரவரி 11ந் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானத் திரைப்படம் கெஹ்ரையான். இப்படத்தின் டிரைலர் வெளியான போதே அதில் இடம் பெற்ற முத்தக்காட்சிகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இதில், சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.

முக்கோண காதல்
இந்த திரைப்படத்தில் தீபிகா தனது தங்கை டியாவுக்கு நிச்சயம் செய்த சித்தான்த் சதுர்வேதியுடன் காதல் மலர்கிறது. ஒரு முக்கோண காதல் கதை கொண்ட இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக தீபிகா நடிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

குப்பை திரைப்படம்
இந்நிலையில், கெஹ்ரையான் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, நானும் ஒரு பிரபலமானவள் தான். ஆனால் இதுபோன்ற காதல்களை நான் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறேன்... பிரபலம், புதிய நாகரீகம் என்ற பெயரில் குப்பை திரைப்படங்களை விற்காதீர்கள் ப்ளீல்... மோசமான திரைப்படங்களை மோசமான திரைப்படங்களாக காட்டுங்கள். இது ஒரு அடிப்படை உண்மை என பதிவிட்டுள்ளார். அதனுடன், ஹிமாலய் கி காட் மேன் பாடலின் வீடியோ கிளிப்பை கங்கனா பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











