ஓய்வின்றி உழைக்கிறேன்...தலைவிக்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கங்கனா
மும்பை : நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தின் படப்பிடிப்புகளை முடித்துள்ளார். இது தொடர்பான படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் டப்பிங் வேலைகளை போத்ரா ஸ்டூடியோவில் அவர் துவக்கி உள்ளார். இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கங்கனா, இந்த படத்திற்காக தான் ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கங்கனா தனது பதிவில், தலைவி படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளேன். 2021 ம் ஆண்டு துவங்கியது முதல் ஒரு நாள் கூட பிரேக்கோ, ஓய்வோ எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக கங்கனா மிகக் கடினமாக உழைத்துள்ளார். தலைவி படத்திற்காக கங்கனா பரதநாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார். இதற்காக தான் எதிர்கொண்ட சவால்களையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்த படத்திற்கு உடல் எடையை பயங்கரமாக கூட்டிய கங்கனா, அதனை மீண்டும் குறைக்க தான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதையும் கூறி உள்ளார். கங்கனாவின் கஷ்டத்திற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய ஹிட் ஆகும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அல்லது அதற்கு பிறகு இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











