»   »  கட்டி பட்டி பிளாப் ஆனதற்கு சல்மான் மீது கொலவெறியில் இருக்கும் கங்கனா?

கட்டி பட்டி பிளாப் ஆனதற்கு சல்மான் மீது கொலவெறியில் இருக்கும் கங்கனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கட்டி பட்டி படம் தோல்வி அடைந்ததற்கு சல்மான் கான் தான் காரணம் என கங்கனா ரனாவத் அணியினர் கூறி வருகிறார்களாம்.

க்வீன், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கங்கனா ரனாவத் இம்ரான் கானுடன் சேர்ந்து கட்டி பட்டி படத்தில் நடித்தார். இம்ரான் கான் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில் அவருடன் கங்கனா நடித்தார்.

அந்த படத்தில் கங்கனா நடிக்க முக்கிய காரணமே சல்மான் கானாம்.

சல்மான் கான்

சல்மான் கான்

கட்டி பட்டி படத்தின் கதை அருமையாக உள்ளது. இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கங்கனாவிடம் சல்மான் கான் தெரிவித்தாராம். அதன் பிறகே அந்த படத்தில் நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டாராம்.

கட்டி பட்டி

கட்டி பட்டி

கட்டி பட்டி படம் வெற்றி பெறும், இம்ரான் கானுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுதோல்வி அடைந்துள்ளது.

கங்கனா

கங்கனா

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த கங்கனா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பாலிவுட்டில் உள்ள பலரையும் சகட்டுமேனிக்கு குத்திக்காட்டி பேசி வந்தார். இந்நிலையில் கட்டி பட்டி தோல்வி அடைந்ததில் அம்மணிக்கு ஒரே வருத்தமாம்.

கோபம்

கோபம்

சல்மான் கான் சொல்லி தானே நாம் இந்த கட்டி பட்டி படத்தில் நடித்தோம். படம் இப்படி படுத்துவிட்டதே எல்லாம் இந்த சல்மானால் தான் என கோபத்தில் உள்ளாராம் கங்கனா.

நாங்களா?

நாங்களா?

சல்மான் கான் ஒன்றும் கங்கனாவை கட்டி பட்டி படத்தில் நடிக்குமாறு கூறவில்லை. அவராகத் தான் அந்த படத்தில் நடித்தார் என்று சல்மானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Buzz is that Kangana Ranaut is angry with Salman Khan for insisting her to act in Katti Batti which turned out to be flop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil