என்னது நான் அந்த 'கிரேடு' நடிகையா..? பிரபல ஹீரோயின் கங்கனா ரனவத்தை அப்படிக் கலாய்த்த டாப்ஸி!

By

மும்பை: தன்னை அந்த கிரேடு நடிகை என்று குறிப்பிட்ட பிரபல ஹீரோயினை நடிகை டாப்ஸி கடுமையாக கலாய்த்துள்ளார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து, சமீபத்தில் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார் நடிகை கங்கனா ரனவத்.

அப்போது அவர், தான் சொன்னதை நிரூபிக்க முடியவில்லை என்றால் எனது பத்மஸ்ரீ விருதைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன் என்றார்.

ஏன் விசாரிக்கவில்லை?

ஏன் விசாரிக்கவில்லை?

மேலும் பேசும்போது, 'மும்பை காவல்துறையில் இருந்து என்னிடம் பேசினார்கள். நான் மணாலியில் இருப்பதால் நேரில் வர முடியாது, யாரையாவது அனுப்பி வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். இந்த வழக்கில், ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், கரண் ஜோகர் ஆகியோரை ஏன் மும்பை காவல்துறை விசாரிக்கவில்லை, இவர்கள்தான் சுஷாந்தின் எதிர்காலத்தை சீரழித்தவர்கள்' என்று கூறியிருந்தார்.

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

கூடவே, சினிமா வாரிசு இல்லாத வெளியாட்கள் என்றும் வாய்ப்பு தேடுபவர்கள் என்றும் நடிகை டாப்ஸி, ஸ்வாரா பாஸ்கரை குறிப்பிட்ட நடிகை கங்கனா, 'அவர்கள் நாளையே தங்களுக்கு கரண் ஜோகரை பிடிக்கும் என்று சொல்லலாம். அவரை பிடிக்கும் என்றால், சிறந்த நடிகைகளான நீங்கள், ஆலியா பட், அனன்யா பாண்டேவை விட அழகாக இருந்தும் பி கிரேடு நடிகைகளாகவே ஏன் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார்.

தரப்படுத்தப்பட்டோம்

தரப்படுத்தப்பட்டோம்

நடிகை கங்கனா இப்படி கூறியிருந்தது பரபரப்பானது. இந்நிலையில் கங்கனாவின் பெயரை குறிப்பிட்டாமல் நடிகை டாப்ஸி அவரைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில், '12, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு எங்களுக்கான முடிவுகளும் வந்துவிட்டது என்று கேள்விபட்டேன். நாம் அதிகாரப்பூர்வமாக இந்த தரமுறையையும் பின்பற்றுகிறோமா? இதற்கு முன் நாங்கள் (நம்பர் ஒன், நம்பர் டூ) எண்களில் தரப்படுத்தப்பட்டோம், சரியா?' என்று கலாய்த்துள்ளார்.

பாராட்டாக பார்க்கிறேன்

பாராட்டாக பார்க்கிறேன்

இதே போல நடிகை ஸ்வாரா பாஸ்கர், வெளியாட்கள்- பி கிரேடு, ஆனால், ஆலியா பட், அனன்யாவை விட சிறந்த தோற்றம் மற்றும் சிறந்த நடிகை! நன்றி கங்கனா. இதை எனக்கான பாராட்டாக பார்க்கிறேன். நீங்கள் அழகானவர், பெருந்தன்மை கொண்டவர், சிறந்த நடிகை என்று நினைக்கிறேன். தொடர்ந்து பிரகாசியுங்கள் என்று கூறியுள்ளார்.

மோதல் புதிதில்லை

மோதல் புதிதில்லை

இதையடுத்து இந்தப் பிரச்னை பரபரப்பாகி இருக்கிறது. ட்விட்டரில் சிலர், 'டாப்ஸியை பி கிரேடு என்றால் நீங்கள் என்ன ஆஸ்கர் லெவல் நடிகையா? முதலில் ஒரு ஹிட் படமாவது கொடுங்கள் என்று சிலர் கூறியுள்ளார். இன்னும் சிலர், கங்கனா கூறியிருப்பதை பாராட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் டாப்ஸி என்று தெரிவித்துள்ளார். கங்கனாவுக்கும் டாப்ஸிக்குமான மோதல் புதிதில்லை. ஏற்கனவே இதுபோன்று நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X