நான் காதலிக்கிறேன்.. அவர் திருமணமானவர்.. நடிகை கங்கனா பகீர்!

சென்னை: தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் குறித்து சரியான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தாகத், சந்திரமுகி 2, தேஜஸ் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தாக வேண்டிய நிலையில் இருகிறார் நடிகை கங்கனா ரனாவத். வெற்றியை எதிர்நோக்கும் அவரின் அடுத்த படைப்பு எமர்ஜென்சி. இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

Kangana Ranaut confirmed dating with someone

எமர்ஜென்சி: ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்த நிலையில், படம் நவம்பர் 24ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்போது படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இதையடுத்து, எமர்ஜென்சி படம் ஜூன் 14ந் தேதி திரைக்கு வரும் என்று கங்கனா அறிவித்துள்ளார்.

தொழிலதிபருடன் காதல்: இந்நிலையில்,நடிகை கங்கனா, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, தொழில் அதிபர் நிஷாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஒரு சில ஊடகங்கள், இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது இது முதல் முறை அல்ல என்றும், சில வாரங்களுக்கு முன்பு கங்கனா, நிஷாந்தின் வீட்டிற்குச் சென்றார் என்று பதிவிட்டு இருந்தார். இதனால், இருவரும், டேட்டிங்கில் இருப்பதாக வதந்தி பரவியது.

நான் காதலிக்கிறேன்: இதற்கு விளக்கம் கொடுத்துள்ள நடிகை கங்கனா, தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்பு வதை நிறுத்துங்கள். நிஷாந்த் பிட்டி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்..நான் வேறு ஒருவரைதான் டேட்டிங் செய்து வருகிறேன். சரியான நேரத்தில் நான் டேட் செய்துவரும் நபர் யார் என்பதை குறித்து உங்களிடம் கூறுகிறேன் என்றார்.

கங்கனா காட்டம்: ஒரு பெண் தெருவில் ஒரு ஆணுடன் ஒன்றாக நடந்து செல்வதை பார்க்கக்கூடாது. அவர், சக ஊழியர்களாகவும், உடன்பிறந்தவர்களாகவும், பணிபுரியும் நண்பர்களாகவும் இருக்கலாம். இளம் பெண்ணை ஒரு புதிய நபருடன் போட்டோ எடுத்த ஒரே காரணத்திற்காக இணைத்து பேசுவது சரியானதல்ல. தயவுசெய்து இதுபோன்ற செயலை செய்யாதீர்கள் என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X