twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அயோத்தி வழக்கு பற்றிய கதை.. மீண்டும் பிரமாண்ட படத்தை இயக்கும் பிரபல ஹீரோயின்.. நடிக்கலையாம்!

    By
    |

    சென்னை: அயோத்தி ராமர் கோயில் வழக்கை மையப்படுத்திய படத்தை தயாரித்து, இயக்க இருப்பதாக நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

    பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத். தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

    சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா.

    அந்த வாட்ச்ச வச்சே காலத்தை ஓட்டிடலாம் போல.. பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.. எத்தனை கோடி தெரியுமா?அந்த வாட்ச்ச வச்சே காலத்தை ஓட்டிடலாம் போல.. பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.. எத்தனை கோடி தெரியுமா?

    லாக்டவுன் காரணமாக

    லாக்டவுன் காரணமாக

    இப்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். அரவிந்தசாமி, மதுபாலா, இந்தி நடிகை பாக்யஶ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

    மணிகர்ணிகா

    மணிகர்ணிகா

    இந்நிலையில், நடிகை கங்கனா, மீண்டும் படம் இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவர், ஏற்கனவே 'மணிகர்ணிகா: த குயின் ஆப் ஜான்சி' என்ற வரலாற்றுப் படத்தை இயக்கியுள்ளார். இப்போது 'அபராஜிதா அயோத்தியா' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் கதை, அயோத்தி ராமர் கோயில் வழக்கைப் பற்றியது.

    விஜயேந்திர பிரசாத்

    விஜயேந்திர பிரசாத்

    இந்தப் படத்தின் கதையை எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இவர், கங்கனா இயக்கி நடித்த 'மணிகர்ணிகா: த குயின் ஆப் ஜான்சி' படத்தின் கதையையும் எழுதி இருந்தார். இதுபற்றி நடிகை கங்கனா கூறும்போது, 'இந்தப் படத்தை இயக்கும் எண்ணம் முதலில் எனக்கு இல்லை. வேறு இயக்குனரை, இதற்கு ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தேன்.

    சிறப்பாக அமையும்

    சிறப்பாக அமையும்

    இந்தப் படத்தைத் தயாரிக்க மட்டும் நினைத்தேன். நான் இயக்கிய முந்தைய படம் போல இதுவும் பெரிய பட்ஜெட் படம். எனது பார்ட்னர்கள், நானே இயக்கினால் நன்றாக இருக்கும் என்றார்கள். நான் இயக்கினால் சிறப்பாக அமையும் என்று நானும் உனர்ந்தேன். பிறகு அனைத்தும் இயல்பாகவே நடந்தது.

    தெய்வத்தின் கதை

    தெய்வத்தின் கதை

    இது சர்ச்சைக்குரிய கதையை கொண்ட படமல்ல. இது காதல், நம்பிக்கை, ஒற்றுமையின் கதையாக பார்க்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு தெய்வத்தின் கதை. இவ்வாறு நடிகை கங்கனா ரனவத் கூறியுள்ளார். படத்தை இயக்கி தயாரிக்க இருப்பதால், இந்தப் படத்தில் கங்கனா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    English summary
    actress Kangana Ranaut has now unveiled that her next directorial after 'Manikarnika: The Queen Of Jhansi', is 'Aparajitha Ayodhya', that is based on the Ram Mandir case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X