கண்கலங்கிய கங்கனா ரனாவத்.. தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவில் உருகி உடைந்து போயிட்டார்!

சென்னை: தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்கனா ரனாவத் கண்கலங்கி அழுத வீடியோ காட்டுத் தீ போல பரவி வருகிறது.

பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசத்தை எதிர்த்து போராடி வரும் கங்கனா ரனாவத்துக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர் அலை வீசி வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்துள்ள கங்கனா ரனாவத் இயக்குநர் விஜய் குறித்து பேசும் போது கலங்கி அழுதுவிட்டார்.

பிரம்மாண்ட வெளியீடு

பிரம்மாண்ட வெளியீடு

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். சென்னையில் இன்று தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கங்கனா ரனாவத் பிறந்தநாள்

கங்கனா ரனாவத் பிறந்தநாள்

1987ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்த நடிகை கங்கனா ரனாவத், இன்று தனது 34வது பிறந்தநாளை சென்னையில் தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவுடன் கொண்டாடினார். சேலை அணிந்து செம கெத்தாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கலங்கிய கங்கனா

கலங்கிய கங்கனா

தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய போது நடிகை கங்கனா ரனாவத் ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழ ஆரம்பித்து விட்டார். மேலும், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலேயே ஷேர் செய்து, இன்று தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கலங்கியதாகவும் ட்வீட் போட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதிகமாக அழ மாட்டேன்

அதிகமாக அழ மாட்டேன்

மேலும், தனது ட்வீட்டில், நான் என்னை எப்போதுமே ஒரு சிங்கப்பெண்ணாகத் தான் பார்ப்பேன். இதற்கு முன்பாக எப்போது அழுதேன் என்று கூட எனக்கு நினைவில்லை. ஆனால், இன்று தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவில் அழுதேன்.. சந்தோஷமாக அழுதேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திறமையை மதித்த விஜய்

திறமையை மதித்த விஜய்

பாலிவுட்டில் கூட என் திறமையை இதுவரை இப்படி யாருமே மதித்தது இல்லை ஆனால், தலைவி படத்தின் இயக்குநர் விஜய் என் திறமையை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தான் தகுதியானவளா என்று கேட்டேன்? அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று நீங்கள் பார்த்த டிரைலர் என பேசி பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

குரூபிசம் கிடையாது

குரூபிசம் கிடையாது

தென்னிந்திய சினிமாவில் சில இடங்களில் நெபோடிசம் தென்பட்டாலும், அங்கே குரூபிசமோ அல்லது கேங்கோ கிடையாது. அதே போல வெளியே இருந்து சினிமா துறைக்குள் வருபவர்களை மரியாதையாக வரவேற்கின்றனர். திறமைக்கு தான் இங்கே அதிகமாக இடம் கொடுக்கின்றனர். மேலும், பல படங்களில் தென்னிந்திய மொழிகளில் பண்ண ஆவலோடு இருக்கிறேன் என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

4 முறை தேசிய விருதுகள்

4 முறை தேசிய விருதுகள்

34 வயதுக்குள் நடிகை கங்கனா ரனாவத் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுடன் சேர்த்து 4 முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு சொந்தக்காரியாக உள்ளார். தலைவி படத்திற்காக 20 கிலோ வரை தனது எடையை கூட்டி நடித்த கங்கனா ரனாவத், அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் அந்த எடையை குறைத்து பழையபடி மாறியது சினிமா மீது வைத்திருக்கும் அவரது தீவிர பற்றையே காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X