twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி.. ஷாருக்கானின் பதான் குறித்து கங்கனா கடும் விமர்சனம்!

    |

    மும்பை : ஷாருக்கானின் திரைப்படம் பதான் பற்றி நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் பதான். இப்படத்தில், தீபிகா படுகோனே நாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும், சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

    கடந்த ஜனவரி 25ந் தேதி திரையரங்குகளில் வெளியான பதான் திரைப்படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.220 கோடியை வசூலித்துள்ளது.

    Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ! Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ!

    நடிகர் ஷாருக்கான்

    நடிகர் ஷாருக்கான்

    நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜீரோ. 2018ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் 4 ஆண்டுகளாக ஷாருக்கான் நடித்த எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. ராக்கெட்ரி, லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா போன்ற திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் ஷாருக் கான்.

    பதான் படத்தின் கதை

    பதான் படத்தின் கதை

    சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக் கான் நடித்த படம் உலகமெங்கும் 7500 க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தி திரைப்படமான இப்படம் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் ஸ்பை ஏஜென்டானா ஜான் ஆபிரகாம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயல்கிறார். இதை ரகசிய ஏஜென்டான ஷாருக் கான் எப்படி தடுத்தார்? என்பது கதை. பதான் திரைப்படத்தின் ஒன் லைன் ஆகும்.

    நடிகை கங்கனா ட்வீட்டர்

    நடிகை கங்கனா ட்வீட்டர்

    பதான் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், பதான் திரைப்படம் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி என்று சொல்பவர்களின் கூற்றை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால் யாருடைய வெறுப்பின் மேல் யாருடைய அன்பு? எண்பது விழுக்காடு இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்பும், அனைவரையும் உள்ளடக்கி உள்ளது.

    இந்தியன் பதான்

    இந்தியன் பதான்

    எங்கள் எதிரி நாடான பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. வெறுப்பு மற்றும் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் வெறுப்பு மற்றும் எதிரிகளின் அற்ப அரசியலை வென்றுள்ளது. இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள் என்று நான் நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்று தெரியும், அது நரகத்திற்கு அப்பாற்பட்டது, எனவே பதான் படத்திற்கு அதன் கதைக்களத்தின்படி பொருத்தமான பெயர் இந்தியன் பதான் என்று பெயர் வைத்து இருக்கலாம் என்று கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Kangana Ranaut criticized shah rukh khan's pathan movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X