அது எப்படிம்மா ஒரே நாள்ல.. அவ்ளோ காஸ்ட்லியான வக்கீல புக் பண்ண? ரியாவை கிழிக்கும் கங்கனா!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் முதல் நாளில் இருந்தே போராடி வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

நேற்று, உச்சநீதிமன்றத்தில் இருந்து ரியா சக்கரவர்த்திக்கு பாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்து இருந்தார்.

அப்போது, ஒரே நாளில், மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞரை ரியா சக்கரவர்த்தி ஏன் புக் பண்ணனும், அதுவும் அவரால எப்படி முடிஞ்சது என கேட்டுள்ளார்.

பதறும் பாலிவுட்

பதறும் பாலிவுட்

கை போ சே, எம்.எஸ். தோனி, சிக்கோரே என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்த ஒரு திறமையான நடிகரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலிவுட் சினிமா புறக்கணித்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி இருப்பதால், பாலிவுட்டில் பலர் பதறி வருகின்றனர்.

அம்பா? வேடனா?

அம்பா? வேடனா?

காதலியாக இருந்தவள் காலனாக மாறி விட்டாளா என்ற கோணத்திலேயே நடிகை ரியா சக்கரவர்த்தி மீது ஒட்டுமொத்த பார்வையும் திரும்பி இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் அவருக்கு தொடர்பு இருக்கா? அவர் ஒரு அம்பா? இல்லை வேடனா? இல்லை ஒன்றுமே தெரியாதா அப்பாவியா என்பது சிபிஐ விசாரணையில் தெரிந்து விடும்.

ஓயாத போராட்டம்

ஓயாத போராட்டம்

முதல் நாளில் இருந்தே இந்த வழக்கில் ஒரு குரல் ஒலித்து வருகிறது என்றால் அது நடிகை கங்கனா ரனாவத்தின் குரல் தான். அவருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், தானும் பாலிவுட் மாஃபியாக்களால் பாதிக்கப்பட்டேன். சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என போராடி வருகிறார்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

நேற்று, உச்சநீதிமன்றம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என உத்தரவு போட்ட நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முதல் வெற்றி கிடைத்து இருப்பதாகவும், விரைவில், உண்மையான குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கைது செய்யப்படுவாரா ரியா

கைது செய்யப்படுவாரா ரியா

மும்பை போலீசாரே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், பீகார் போலீசார் மற்றும் சிபிஐ வசம் இந்த வழக்கு சென்று விடக் கூடாது என்பதில் மிகவும் தீவிரம் காட்டிய நடிகை ரியா சக்கரவர்த்திக்கு பாதகமாக தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பையும் சுஷாந்துக்காக நீதி கேட்டு போராடி வரும் தரப்பு எதிர்நோக்கி வருகிறது.

கங்கனா கேள்வி

கங்கனா கேள்வி

இது தொடர்பாக நேற்று செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கங்கனா ரனாவத், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணை தன் பக்கம் சாய்கிறது என்று தெரிந்த முதல் நாளே, மிகவும் காஸ்ட்லியான சீனியர் கிரிமினல் வழக்கறிஞரை, நடிகை ரியாவால் எப்படி அணுக முடிந்தது என்றும், இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால், அப்பாவித் தனமாக இருந்திருந்தால், அவர் மீது ஏன்? சுஷாந்த் சிங் குடும்பத்தினரே வழக்கு தொடர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்
அது கிடையாது

அது கிடையாது

மேலும், எனது நோக்கம் ஒருவரை டார்கெட் செய்து அவரை தான் குற்றவாளி என இந்த வழக்கில் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. ஆனால், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு சரியான விசாரணை நடத்தப்பட்டு, அவரது மரணத்திற்கு காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எனவும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X