Kangana Ranaut: கங்கனா ரனாவத்தின் கடைசி நம்பிக்கை... ரிலீஸ் தேதியுடன் வெளியான எமர்ஜென்ஸி டீசர்!

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் எமர்ஜென்ஸி.

1975ம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் அரசு எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது.

அதனை பின்னணியாக வைத்து எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார் கங்கனா ரனாவத்.

ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகியுள்ள எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதியும் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.

 Kangana Ranaut drops new teaser announcing the release date for the Emergency film

கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்ஸி ரிலீஸ் தேதி: இந்தியில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, தாம் தூம் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதேபோல், தெலுங்கிலும் கங்கனா ரனாவத்துக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் கூறி ட்ரெண்டாகி வருகிறார் கங்கனா ரனாவத். இதனால் அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தக்கட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. 90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இந்நிலையில் தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் கங்கனா, எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி காலகட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. இதில் இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். சுமார் 21 மாதங்கள் அமலில் இருந்த எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில், இந்தியாவில் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

 Kangana Ranaut drops new teaser announcing the release date for the Emergency film

இதனை பின்னணியாகக் கொண்டே கங்கனா ரனாவத் இயக்கியுள்ள எமர்ஜென்ஸி உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசரை தற்போது தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் கங்கனா ரனாவத். அனுபம் கெர் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் இந்த டீசர், எமர்ஜென்ஸி காலக்கட்டத்தை அப்படியே நகலெடுத்ததை போல உருவாகியுள்ளது. அதேபோல் கங்கனா ரனாவத்தின் இந்திரா காந்தி லுக்கும் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

இந்த டீசரின் இறுதியில் எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதியையும் கங்கனா அறிவித்துள்ளார். அதன்படி, இந்தப் படம் உலகம் முழுவதும் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், எமர்ஜென்ஸி படம் குறித்து பேசியுள்ள கங்கனா ரனாவத், "இந்திய அரசியலில் கறுப்பு பக்கமான எமர்ஜென்ஸி குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் இந்தப் படத்தை இயக்கினேன்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X