ரூ.4 கோடி மதிப்பு.. தனது வீடுகளை சகோதரி, சகோதரருக்கு பரிசாக வழங்கிய பிரபல நடிகை!
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் தனது நான்கு பிளாட்களை சகோதரி மற்றும் உறவினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர், தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்
இதில், எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ்
இதையடுத்து, தான் நடித்த மணிகர்னிகா படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து நடிக்க உள்ளார். இதற்கு 'மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் முதல் பெண் ஆட்சியாளர் என்று கூறப்படும் திட்டா என்பவர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்க இருக்கிறார்.

நான்கு பிளாட்கள்
நடிகை கங்கனா ரனாவத், சண்டிகரில் நான்கு பிளாட்களை வாங்கியிருந்தார். சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள அந்த பிரமாண்டமான பிளாட்களை, தனது சகோதரி ரங்கோலி சாண்டல், சகோதரர் அக்ஷத் மற்றும் 2 உறவினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர்களுடைய சொந்த வீடு கனவுகளை நிறைவேற்றியுள்ளார்.

பரிசாக வழங்கினார்
'கங்கனா எப்போதும் தனது சகோதரிக்கும் உறவினர்களுக்கும் ஆதரவாக இருப்பவர். இப்போது சண்டிகரில் இருக்கும் பிளாட்களை பரிசாக வழங்கியதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். சண்டிகர் விமான நிலையத்தின் அருகில் இந்த பிளாட்கள் இருக்கின்றன; என்று நடிகை கங்கனாவுக்கு வேண்டியவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











