முதலில் ஜெயலலிதா, இப்போது இந்திரா காந்தி...கலக்கும் கங்கனா

மும்பை : பல மொழிகளிலும் சூப்பர் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது கங்கனா ரணாவத் தான். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அது ஏற்றாற் போல் மாறி விடுவதை மீண்டும் நிரூபித்து வருகிறார் கங்கனா.

மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமி பாயாகவே மாறி இருந்த கங்கனா, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்திற்காக உடல் எடையை நம்ப முடியாத அளவிற்கு கூட்டி இருந்தார். ஜெயலலிதா போன்ற தத்ரூபமான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி எடையை கூட்டி இருந்தார்.

அடுத்த படத்திற்கு தயாராகும் கங்கனா

அடுத்த படத்திற்கு தயாராகும் கங்கனா

தற்போது தனது அடுத்த படங்களான தேஜாஸ், தாகத் படங்களுக்காக மீண்டும் உடல் எடையை குறைத்து மிக கடுமையான ஆக்ஷன் பயிற்சிகளை எடுத்து வருகிறார். இன்றைய தேதியில் கங்கனா கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

Recommended Video

Thalaivi Reel Vs Real | J.Jayalalitha, MGR, A.L.Vijay, Thalaivi Trailer
இந்திராவாக மாறும் கங்கனா

இந்திராவாக மாறும் கங்கனா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்திற்காகவும் தன்னை தயார் செய்து வருகிறார் கங்கனா. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடிக்க போகிறார் என்ற தகவலும், அது தொடர்பான ஃபோட்டோக்களும் வெளியாகி, வைரலாகின.

எமர்ஜென்சி ஃபோட்டோ வெளியீடு

எமர்ஜென்சி ஃபோட்டோ வெளியீடு

இந்நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்துள்ளார் கங்கனா. எமர்ஜென்சி என பெயரிடப்பட்டுள்ள படத்தில் தான் இந்திரா காந்தியாக நடிக்க போவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பதிவிட்டுள்ளார் கங்கனா. இந்த பதிவினை ஏறக்குறைய 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

 இது ஸ்பெஷல் படமாக இருக்கும்

இது ஸ்பெஷல் படமாக இருக்கும்

அதில், ஒவ்வொரு கேரக்டரும் ஒரு புதிய பயணத்திற்கான அழகிய ஆரம்பம். இன்று எமர்ஜென்சிக்கான பயணத்தை துவக்கி உள்ளோம். உடல், முகம் என அனைத்திலும் இந்திராவின் தோற்றத்தை கொண்டு வருவதற்கான ஸ்கேனிங் நடக்கிறது. பல அற்புதமான நடிகர்கள் இதில் இணைய உள்ளனர். மணிகர்னிகா போன்று இதுவும் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் கங்கனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X