Kangana Ranaut : அரசியல் தலைவரால் பல கோடியை இழந்தேன்.. கங்கனா ரனாவத் பேட்டி!
சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களால் பலவற்றை இழந்துவிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வில்லங்கமான அல்லது சர்ச்சையான கருத்துக்களை பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தகாட் பெரும் இழப்பை சந்தித்தது.

கங்கனா ரனாவத் : 35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் என்ட்ரியானவர். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரனாவத் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ட்விட்டர் கணக்கு முடக்கம் : அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாக உள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த காரணத்தால் கடந்த 2021 ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

சந்திரமுகி 2 : தற்போது இவர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். லஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, மனோ பாலா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சந்திரமுகி 2 படத்தில் தனது போர்ஷனை அண்மையில் தான் நடிகை கங்கனா ரனாவத் முடித்திருந்தார்.

வருமானத்தை இழந்தேன் : இந்நிலையில், சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் சினிமா, அரசியல் என எதுவாக இருந்தாலும் எனது கருத்தை துணிச்சலுடன் தைரியமாக சொன்னதால் பல கோடி வருவாயை இழந்தேன். அரசியல் தலைவர்கள் சிலர் பேரால், விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் கை நழுவிப்போனது இதனால், ஓராண்டில் மட்டும், 30 முதல் 40 கோடி வருவாயை இழந்துவிட்டேன் என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











