சந்திரமுகி 2 படத்துல இவங்க தான் ஹீரோயினா? இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருந்தது!
சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் யார் ஹீரோயின் என்பதே இதுவரை கன்ஃபார்ம் ஆகவில்லை என்கின்றனர்.
ஹீரோயினை மறைத்து வைத்து விட்டுத் தான் படப்பிடிப்பை பரபரப்பாக எடுத்து வருகின்றனர் என நினைத்துக் கொண்டிருந்தால், இப்போ தான் அந்த பாலிவுட் நடிகையுடன் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம்.
அய்யோ அவங்களா? பாலிவுட்டையே கதற விட்டவங்களாச்சே என கோடம்பாக்கமே அதிரும் அளவுக்கு பேச்சுக்கள் பரபரப்பாகி உள்ளன.

3 ஆண்டுகள் ஓடிய படம்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் திரையரங்கில் ஓடி பிரம்மாண்ட சாதனையை படைத்தது. வடிவேலு, நாசர், மாளவிகா, பிரபு என ஏகப்பட்ட நடிகர்கள் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மணிசித்ரதாழு படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ராவாக எடுத்து ஹிட்டாக்கிய பி. வாசு தமிழில் சந்திரமுகி படத்தை கொடுத்தும் மெகா பிளாக்பஸ்டர் கொடுத்தார்.

சந்திரமுகியாக ஜோதிகா
ரஜினிக்கு ஜோடியாக ஒரு பக்கம் நயன்தாரா அழகு பதுமையாக நடிக்க, மறுபக்கம் கங்கா மற்றும் சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகா தனது அசுரத்தனமான நடிப்பால் மிரட்டி எடுத்தார். "ரா ரா" பாடலும், அதில் வரும் "லக லக" வசனமும் இன்னமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

சந்திரமுகி 2
மீண்டும் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. வடிவேலுவை தவிர முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் யாரும் இந்த படத்தில் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதை என்கின்றனர். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோயினாக யார் நடித்து வருகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகையின் பெயர் அடிபட்டு வருகிறது.

கங்கனா ரனாவத்தா
இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தான் சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் அவர் நடிக்கும் படங்களே ஓடாத நிலையில், தலைவிக்கு பிறகு மீண்டும் தமிழில் கங்கனா ரனாவத் நடித்தால் சந்திரமுகி 2 முதல் பாகம் அளவுக்கு வெற்றி பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











