அதிகாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்துவதா? போலீஸை சரமாரியாக விளாசிய பிரபல ஹீரோயின்!

By

மும்பை: ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்திய போலீசாரை, பிரபல நடிகை சரமாரியாக விளாசியுள்ளார்.

Recommended Video

Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply

பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனவத் எதையும் வெளிப்படையாக பேசிவிடுபவர்.

இதனால் இவரும் இவர் சகோதரி ரங்கோலியும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் வழக்கம்.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

கங்கனா, தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர். இப்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பரபரப்பு தகவல்களை தெரிவித்து வருகிறார்.

பரபரப்பு விவாதங்கள்

பரபரப்பு விவாதங்கள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் மறைவை அடுத்து இந்தி சினிமாவில் நெபோடிசம் பற்றி பரபரப்பு விவாதங்கள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

சுஷாந்த் தந்தை

சுஷாந்த் தந்தை

நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். இதையடுத்து பீகார் போலீசார், ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் மும்பை வந்துள்ளனர்.

கட்டாய தனிமை

கட்டாய தனிமை

அவர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத மும்பை போலீசார், வினய் திவாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்தி உள்ளனர். அவருக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மெஸ்சில் தங்குவதற்கான இடமும் ஒதுக்கவில்லை என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதை நடிகை கங்கனா கடுமையாகச் சாடியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு டேக் செய்து அவர் கூறியிருப்பதாவது:

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

'இது என்ன குண்டர்கள் ராஜ்ஜியமா? சுஷாந்த் சிங்கை கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எந்த 'அவுட்சைடரும்' மும்பையில் பாதுகாப்பாக இருக்க முடியாது. குற்றவாளிகள் மேலும் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். தயவு செய்து இந்த விவகாரத்தில் தலையிடுங்கள்' என்று கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனவத்தின் இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X