நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை.. பாலிவுட்டை விளாசிய பிரபல நடிகை!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் திட்டமிட்ட கொலை என்று பிரபல நடிகை விளாசியுள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்றுமுன் தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

மருந்து, மாத்திரை
அவர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இறுதிச் சடங்கு
அவரது இறுதிச்சடங்கு மும்பையில் நேற்று நடந்தது. இதில் பிரபல நடிகர்கள் விவேக் ஓபராய், ரன்தீப் ஹூடா, ராஜ்குமார் ராவ், நடிகைகள் ஸ்ரத்தா கபூர், ரியா சக்கரவரத்தி, கீர்த்தி சனான், பூஜா சோப்ரா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை சுஷாந் சிங்கின் நண்பரும் இயக்குனருமான சந்தீஷ் சிங் செய்தார்.

உரிய மரியாதை
இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து நடிகை கங்கனா ரனவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலிவுட்டை விளாசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திறமை இருந்தும் நடிகர் சுஷாந் சிங்குக்கு உரிய மரியாதையை இந்தி திரையுலகம் அளிக்கவில்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்றவர் அவர்.

அங்கீகரிக்கவில்லை
அப்படிப்பட்ட ஒருவர் எப்படி மனரீதியாக பலவீனமாக இருக்க முடியும்? கை போ சே படத்தில் அவர் திறமையை ஏன் யாரும் அங்கீகரிக்கவில்லை? கல்லி பாய் போன்ற படம் பல விருதுகளைப் பெறும்போது, அவர் நடித்த சிச்சோரே போன்ற சிறந்த படங்களுக்கு ஏன் விருதுகளோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை? நான் ஒரு ஹிட் படத்தை இயக்கியும் (மணிகர்ணிகா) அதற்கான மரியாதையை எனக்கு அளிக்கவில்லை.

ஏன் விதைக்கிறார்கள்?
சிலர், கடினமான சூழலில் இருக்கும்போது தவறான முடிவை எடுத்துவிடாதீர்கள் என்று என்னிடம் அடிக்கடி சொல்வார்கள். நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏன் என்னுள் விதைக்கிறார்கள்? சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை. மதிப்பில்லாதவர் என்று தன்னைப் பற்றி சொன்னவர்களை நம்பியதுதான் அவர் செய்த பெரும் தவறு. இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











