இரும்பு மனுஷி ஜெயலலிதா.. "அயர்ன்லேடி" கங்கனாவின் அஞ்சலி!
சென்னை: ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கங்கனா ரனாவாத். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏ.எல்.விஜய் இயத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் தலைவி, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவாத் நடித்து வருகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன், தலைவி என்ற தலைப்புடன் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஜெயலலிதா அம்மையார் நம்மைவிட்டு சென்று இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என பலரும் அவர் அவரின் பங்கிற்கு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி என்ற பெயரில் எடுக்கபட்டு படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
குயின் வெப் சீரிஸை கெளதம் மேனன் இயக்குகிறார். இனண இயக்குனராக கிடாரி பட இயக்குனர் பிரசாத் முருகேசன் படத்தை இயக்குகிறார். இந்த வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக மாபெரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











