Thalaivi: தலைவி.... விஜய் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!
இயக்குனர் விஜய் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கணா ரனாவத் நடிக்கிறார்.
சென்னை : விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கணா ரனாவத் நடிக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கங்கணா ரனாவத். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், தானாகவே முயற்சித்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
குயீன்,தானு வெட்ஸ் மானு உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கங்கணா ரனாவத் பெற்றுள்ளார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கணா
இந்நிலையில் விப்ரி மீடியாஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரனாவத் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கங்கணாவின் பிறந்த தினம் என்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பெருமைப்படுகிறேன்
இதுகுறித்து பேசிய கங்கணா, "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி சரித்திரத்தை கொண்டவர் ஜெயலலிதா. ஒரு நடிகையாக இருந்து இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவராக உயர்ந்தவர். அவரது கதை, ஒரு வரலாற்று சினிமாவுக்கு மிகவும் ஏற்புடையது. அதில் நடிப்பதில் எனக்கு பெருமை", என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தலைவி
தலைவி படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவாகிறது. விப்ரி மீடியாஸ் சார்பில் விஷ்ணு இந்தூரியும், கர்மா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சைலேஷ் சிங்கும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இந்தியில் இப்படத்திற்கு ஜெயா என பெயரிடப்பட்டுள்ளது.

போட்டி போடும் திரைத்துறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் ஏகப்பட்ட போட்டி நிலவுகிறது. 'தி அயர்ன் லேடி' எனும் பெயரில் பிரியதர்ஷிணி இயக்கும் படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











