Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னையை விட எடுப்பாவும்.. துடிப்பாவும் யாராச்சும் இருக்காங்களா.. சொல்லங்க பார்ப்போம்.. கங்கனா பலே!
மும்பை : பாலிவுட் நடிகைகளில் துணிச்சலான நடிகை என புகழப்படுபவர் கங்கனா ரணாவத். அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கக் கூடிய நடிகையும் இவர் தான்.
கங்கனா - ஹிருத்திக் ரோசன் இடையேயான காதல் விவகாரம் பாலிவுட்டையே கதிகலங்க வைத்து. அதற்கு பிறகு சமீபத்தில் சிவசேனா கட்சி உடனான கங்கனா மோதல், பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த பரபரப்பு குறைவதற்குள், விவசாயிகள் போராட்ட விவகாரத்திலும் கருத்து சொல்லி, சரச்சையில் சிக்கினார் கங்கனா.
தப்பு
பண்ணாதீங்கடா..
சினிமாவில்
தாக்கத்தை
உண்டாக்கிய
சேலம்
சித்த
வைத்தியர்..
மறக்க
முடியுமா!
விவசாயிகள் பிரச்னைகள் பற்றி ட்விட்டரில் தீவிரமாக கருத்து கூறி வந்தவர், திடீரென அதை அப்படியே விட்டு விட்டு, தனது புதிய படங்கள் குறித்த படங்களை வெளியிட்டு, அது பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கி விட்டார்.

என்னை போல யாரு
தலைவி மற்றும் தாகத் படத்தின் போட்டோக்களை பதிவிட்ட கங்கனா, நான் வெளிப்படையாக விவாதிக்க தயாராக உள்ளேன். இந்த பிரபஞ்சத்திலேயே என்னை விட நடிப்பில் திறமையான வேறு எந்த நடிகையாவது இருப்பதாக காட்டினால் நான் எனது பிடிவாதத்தை விட்டு விடுகிறேன்.
|
குதிரையேற்றம் எனக்கும் தெரியும்
மணிகர்னிகா படத்தில் குதிரையேற்ற காட்சியில் கங்கனா நடித்ததை பலரும் கேலி செய்திருந்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு இப்போது பதிலளித்துள்ள கங்கனா, நீங்கள் சொன்னது போல் அந்த படத்தில் சில டிரிக்களை கையாண்டது உண்மை தான். லட்சுமி பாய் அளவிற்கு என்னால் குதிரையேற்றம் பண்ண முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இப்போது எனக்கு குதிரையேற்றம் தெரியாது என உங்களால் சொல்ல முடியாது என கருத்து பதிவிட்டுள்ளார். அத்துடன் தான் குதிரையேற்றம் செய்யும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கார் எல்லாம் தூசி
சிலர் கேட்கிறார்கள் நீங்கள் எத்தனை ஆஸ்கார், நேசிய அல்லது பத்ம விருதுகளை வாங்கி உள்ளீர்கள் என்று. அவர்களுக்கு எனது பதில் எதுவும் இல்லை என்பது தான். எப்போதும் சுயமரியாதையும், சுய மதிப்பும் இருப்பதை உங்களால் காண முடியும். நான் இந்தியன். அதனால் ஹாலிவுட் நடிகைகளை போல் நாங்கள் இருக்க வேண்டியதில்லை. நான் பிலிம்பேர் விருதையே ஆஸ்காராக நினைத்து வாங்குவேன்.

நான் திறமையான நடிகை
நான் மெர்லி ஸ்ட்ரீப் போல் திறமையான நடிகை. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். ஆக்ஷன், கிளாமர் என அனைத்திலும் திறமை காட்ட முடியும், கால் கடவுட் போல் என கங்கனா தன்னை புகழ்ந்து பல ட்வீட்களை பதிவிட்துள்ளார்.

எதுக்கு இந்த விளம்பரம் :
ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது தான் கங்கனா இப்படி தன்னை புகழ்ந்துள்ளார். கங்கனாவின் இந்த பதிலை பாராட்டியும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். சிலர் தனக்கு ஊக்கமளிக்கும் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக கங்கனாவே குறிப்பிட்டுள்ளார்.