தலைவி படத்தின் ட்ரைலர்.. கங்கனா ரணவத் வெளியிட்ட Glimpse வீடியோ

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவரவுள்ள திரைப்படம் தலைவி.

இந்த படத்தில் கங்கனா ரணவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்துள்ளனர்.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படமானது ஏப்ரல் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

சென்னை மற்றும் மும்பை

சென்னை மற்றும் மும்பை

தலைவி படத்தை குறித்து பேசிய படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய், கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருந்த ஒரு லெஜெண்டின் வாழ்க்கையை தலைவி திரைப்படம் பிரதிபலிக்கும். எனவே 'தலைவி' படத்தின் ட்ரெய்லரை மிகப்பெரிய அளவில் மும்பை மற்றும் சென்னையில் வெளியிடுகிறோம் என கூறியுள்ளார்.

இன்னும் ஒரு நாளில்

இன்னும் ஒரு நாளில்

"தலைவி ட்ரைலர் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ளது, தலைவி உருவாகி கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடை கூடி, அடுத்த சில மாதங்களில் எடை குறைத்தது மட்டும் எனக்கு சவாலாக இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் ஜெயா உங்களுடையவள் ஆகி விடுவார்" என ட்வீட் பதிவிட்டுள்ளார் கங்கனா.

கங்கனா பதிவிட்டார்

கங்கனா பதிவிட்டார்

தலைவி படத்தை குறித்தும், ஜெயலலிதாவின் கதாபாத்திரம் குறித்தும் ட்வீட் பதிவிட்ட கங்கனா அத்துடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முன்னதாக ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று தலைவி படக்குழு வெளியிட்ட புகைப்படங்களை தொடர்ந்து இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

இதையடுத்து கங்கனா நாளை வெளியாகவுள்ள படத்தின் ட்ரைலர் குறித்து glimpse வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள தலைவி படத்தின் ட்ரைலரை சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி ஜெயலலிதாவின் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X