Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நெபோடிசம்.. போதை மாபியா.. பங்களா இடிப்பு.. சர்ச்சைகளுக்கு பின் தலைவி ஷூட்டிங்கில் பங்கேற்ற கங்கனா!
சென்னை: ஏழு மாதங்களுக்குப் பிறகு தலைவி ஷூட்டிங்கில் நடிகை கங்கனா ரனவத் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.
விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, கங்கனா ரனவத் நடிக்கிறார்.
இன்னும்
மூன்று
நாள்
தான்
இருக்கு..
பக்கா
புரமோவுடன்
மிரட்டும்
கமல்ஹாசன்..
பிக்பாஸ்
பார்க்க
ரெடியா?

ஜி.வி.பிரகாஷ்குமார்
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்
இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. கடந்த 7 மாதமாக இதன் படப்பிடிப்பு நடக்கவில்லை.

சுஷாந்த் சிங் மரணம்
இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனவத் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. நெபோடிசம் பற்றிய விஷயத்தை அவர்தான் தொடங்கி வைத்தார். அது பெரும் பிரச்னையாக மாறியது. அடுத்து பாலிவுட்டில் போதை மாஃபியாக செயல்படுவதாக பரபரப்பு புகார் கூறினார்.

கடுமையாகச் சாடினார்
கரண்
ஜோஹர்,
மகேஷ்
பட்
ஆகியோர்களை
கடுமையாகச்
சாடினார்.
பின்னர்
மகாராஷ்ட்ரா
அரசுக்கும்
அவருக்கும்
மோதல்
ஏற்பட்டது.
பின்னர்
அவர்
பங்களாவை
மும்பை
கார்ப்பரேசன்
இடித்தது.
இது
தொடர்பாக
அவர்
வழக்குத்
தொடர்ந்துள்ளார்.
விசாரணை
நடந்து
வருகிறது.
இந்நிலையில்,
7
மாதங்களுக்குப்
பிறகு
தலைவி
படத்தின்
ஷூட்டிங்
அவர்
இன்று
கலந்துகொண்டுள்ளார்.
Recommended Video

ஸ்பெஷல் நாள்
இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை கங்கனா, 'இன்றைக்கு எனக்கு ஸ்பெஷல் நாள். 7 மாதங்களுக்கு பிறகு எனது லட்சிய படமான 'தலைவி' ஷூட்டிங்கிற்காக தென்னிந்தியா வந்திருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் உங்கள் ஆசிர்வாதம் தேவை' என்று கூறியுள்ள அவர், தனது செல்ஃபி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.