தலைவியே பரவாயில்லை போல.. அதள பாதாளத்திற்கு சென்ற கங்கனா ரனாவத்தின் தாக்கட் பட வசூல்!

மும்பை: அவெஞ்சர்ஸ் பிளாக் விடோவுடன் எல்லாம் தன்னை ஒப்பிட்டு புரமோஷன் செய்ததெல்லாம் சல்லி சல்லியா நொறுங்கிப் போச்சே என தலையில் கை வைத்து உட்கார்ந்து இருக்கிறார் தாக்கட் பட நடிகை கங்கனா ரனாவத்.

தேவையற்ற சர்ச்சை ட்வீட்களை போட்டு வந்த இவரை ட்விட்டர் நிறுவனம் முடக்கிய நிலையில், பாலிவுட்டிலும் ஏகப்பட்ட பகைமையை வளர்த்துக் கொண்டார்.

மணிகர்ணிகா படம் எல்லாம் எப்படி ஓடியது. இந்நிலையில், தலைவி படத்தைத் தொடர்ந்து தாக்கட் படத்தில் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது கங்கனா ரனாவத் மார்க்கெட்.

தரைமட்டத்தில் தலைவி வசூல்

தரைமட்டத்தில் தலைவி வசூல்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான தலைவி திரைப்படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் யாருக்கும் ஜெயலலிதாவின் கம்பீரத்தில் பாதி கூட கங்கனாவுக்கு இல்லை என கழுவி ஊற்றிய நிலையில், முதல் நாள் வசூல் 1 கோடி ரூபாய் அளவே வந்து படுதோல்வியை சந்தித்ததாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அவெஞ்சர்ஸ் ரேஞ்சுக்கு அலப்பறை

அவெஞ்சர்ஸ் ரேஞ்சுக்கு அலப்பறை

தலைவி படம் ஓடாத நிலையில், மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சித்தார் கங்கனா ரனாவத். மேலும், தாக்கட் படத்தை புரமோட் செய்ய அவெஞ்சர்ஸ் படங்கள் எல்லாம் மகாபாரதத்தில் இருந்து உருவாக்கப்பட்டது என்றும், பிளாக் விடோவுக்கு சமமான கதாபாத்திரம் தான் தாக்கட் படத்தில் தான் நடித்துள்ள அக்ன் கதாபாத்திரம் என அளந்து விட்டார்.

தம்பி அந்தப் பக்கம் போகாத

தம்பி அந்தப் பக்கம் போகாத

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை Bhool Bhulaiya 2 படத்துடன் போட்டியாக ரிலீசான கங்கனா ரனாவத் படம் காலியான தியேட்டர்களுடன் படுதோல்வியை சந்தித்துள்ளது. கங்கனா ரனாவத் ஃபிளைட் ஜெட் எல்லாம் ஓட்டுறாங்க, ஆக்‌ஷன் பண்ணியிருக்காங்களேன்னு போஸ்டரை பார்த்து டிக்கெட் எடுக்க போகும் ஒரு சிலரையும், தம்பி அந்த பக்கம் போகாத என ரசிகர்கள் காப்பாற்றி வருவதாக ட்ரோல்கள் பறக்கின்றன.

வெறும் 50 லட்சம் தான்

வெறும் 50 லட்சம் தான்

முதல் நாள் வசூலை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கலாய்த்து வருகின்றனர். தலைவி படமாவது முதல் நாளில் 1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், 85 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்கனா ரனாவத்தின் தாக்கட் படம் வெறும் 50 லட்சம் மட்டுமே வசூல் செய்து அதள பாதாளத்திற்கு அவரது மார்க்கெட்டை கொண்டு சென்றுள்ளது என கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X