பரபரப்புக்கு நடுவிலும் புதிய போஸ்டரை வெளியீடு...ரசிகர்களை குஷிப்படுத்திய கங்கனா

அடுத்தடுத்து பரபரப்புகள், சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத். சிவசேனாவுடனான மோதல் பரபரப்பு அடங்குவதற்குள், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பான சூழலிலும் தவறாமல் தனது புதிய படமான 'தாகத்' படத்தின் புதிய போஸ்டரை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய கங்கனாவின் புதிய படம் தான் 'தாகத்'.

Kangana Ranauts fierce look as Agent Agni from Dhaakad revealed

ரஜ்னீஸ் காய் இயக்கும் இப்படம் பற்றிய அப்பேட்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் படக்குழுவினர். ஆக்ஷன் படமான தாகத்தில் அக்னி என்ற உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார்.

சுற்றிலும் தீ எரியும் காட்சிகளுக்கு நடுவே, கையில் துப்பாக்கி உடன், கருப்பு நிற உடையில் கங்கனா நடந்து வரும் இந்த போஸ்டர் அனல் தெறிப்பதாக உள்ளது.

Kangana Ranauts fierce look as Agent Agni from Dhaakad revealed

இந்த போஸ்டருடன், "அவர்கள் அவளை அக்னி என்கிறார்கள். அவள் தாகத்தில் துணிச்சலான ஒருத்தி. அவள் எனது சித்தரிப்பு. பைரவி தெய்வத்தின் வடிவம்" என்ற வசகத்தையும் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் இப்படம் பற்றிய அப்டேட்களை வெளியிட்ட கங்கனா, ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இப்படம் ரூ.25 கோடிக்கும் அதிகமான செலவில் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தை மட்டுல்ல இப்படத்தின் டைரக்டரையும் புகழ்ந்து கங்கனா கருத்து பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X