ஓவர் சர்ச்சை.. வாக்குவாதம்.. துப்பாக்கிச் சூடு.. நடிகை கங்கனாவின் பாதுகாப்புக்காக திடீர் பூஜை!

By

மும்பை: நடிகை கங்கனாவின் பாதுகாப்புக்காக அவரது அம்மா சிறப்பு பூஜையை நடத்தி உள்ளார்.

இந்தி நடிகையான கங்கனா ரனவத் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்.

இதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் வழக்கம்.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

கங்கனா, தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர். இப்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பரபரப்பு தகவல்களை தெரிவித்து வருகிறார்.

பரபரப்பு விவாதங்கள்

பரபரப்பு விவாதங்கள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் மறைவை அடுத்து இந்தி சினிமாவில் நெபோடிசம் பற்றி பரபரப்பு விவாதங்கள் தொடங்கியுள்ளன.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக வாக்குவாதங்கள் எழுந்துள்ளன. இதில் அவுட்சைடர்களுக்கு ஆதரவாக நடிகை கங்கனா பரபரப்பு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்தி பிரபலங்களை கடுமையாக சாடி வருகிறார். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை அரசியல்வாதிகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிக் குண்டு

துப்பாக்கிக் குண்டு

இதையடுத்து மணாலியில் உள்ள அவரது வீட்டின் அருகே துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை பாஜக சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிட அழைத்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தனது தாத்தா காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை எனவும் கூறி இருந்தார். இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கங்கனாவின் பாதுகாப்புக்காக அவர் அம்மா சிறப்பு பூஜையை நடத்தி இருக்கிறார்.

Recommended Video

Sushant Singh Case ல் அடுத்த விசாரணை Kangana Ranaut
குடும்பத்துக்கு நன்றி

குடும்பத்துக்கு நன்றி

இதுபற்றி நடிகை கங்கனா ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: என் பாதுகாப்பு பற்றி அம்மா அதிக அக்கறை கொண்டிருக்கிறார். இதற்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார். மஹாமிர்துஞ்சயா மந்திரத்தின் ஒரு லட்சம், பதினைந்தாயிரம் பாடல்களை பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது இன்றோடு (நேற்று) முடிந்துவிட்டது. எனது குடும்பத்துக்கு நன்றி' என்று கூறியுள்ளார். கூடவே அவர் பூஜை செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X