twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ஜெயா-னு தலைப்பு வேண்டாமே.." விஜய்யிடம் கேட்டுக்கொண்ட ‘தலைவி’ கங்கணா.. ஏன் தெரியுமா?

    தலைவி படத்திற்கு இந்தியில் ஜெயா எனப் பேர் வைக்க வேண்டாம் என நடிகை கங்கணா ரனாவத் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

    |

    Recommended Video

    ஜெயலலிதாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது தான்- நடிகை கங்கனா- வீடியோ

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்திற்கு இந்தியில் ஜெயா எனப் பேர் வைக்க வேண்டாம் என புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளாராம் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்.

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தை வெவ்வேறு பெயரில் பலர் படமாக எடுத்து வருகின்றனர். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, 'தி அயர்ன் லேடி' என்கிற பெயரில் நித்யா மேனனை வைத்து இயக்குகிறார்.

    இதே போல், இயக்குநர் விஜய், பிரபல பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து தலைவி என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்.

    ஐந்தாறு இடத்தில் ஆழமான வெட்டு.. பதற வைக்கும் மதுவின் கை காயம்.. ஷாக் போட்டோ வெளியிட்ட டேனி!ஐந்தாறு இடத்தில் ஆழமான வெட்டு.. பதற வைக்கும் மதுவின் கை காயம்.. ஷாக் போட்டோ வெளியிட்ட டேனி!

    ஜெயா

    ஜெயா

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கு `தலைவி' எனவும், இந்தி வெர்ஷனுக்கு 'ஜெயா' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்தியிலும் தலைவி

    இந்தியிலும் தலைவி

    இந்நிலையில், இப்படத்தலைப்பு பற்றிய தன்னுடைய கருத்தை இயக்குநர் விஜய்யிடம் கங்கணா முன் வைத்துள்ளாராம். அதில், ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும்போது, அவை மூன்றுக்கும் ஒரே பெயர் வைப்பது தான் சரியாக இருக்கும். எனவே, இந்தியில் தலைவி என்றே பெயர் வைக்கலாம்' என கங்கனா கேட்டுக் கொண்டுள்ளாராம்.

    படக்குழு யோசனை

    படக்குழு யோசனை

    கங்கனாவின் கருத்தும் யோசிக்கப்பட வேண்டியது தான். ஏனென்றால் ஒரே பெயர் வைத்தால் புரொமோசன் வேலைகளும் எளிதாக இருக்கும் என்பதால், இது குறித்து படக்குழு யோசித்து வருகிறதாம். எனவே, 'தலைவி' என்கிற பெயரில் இந்தி டைட்டில் லுக் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வெப் சீரிஸ்

    வெப் சீரிஸ்

    ஜெயலலிதாவாக நடிப்பதற்காக பரதநாட்டியம் கற்பது போன்ற தயாரிப்பு வேலைகளில் கங்கனா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், இது ஒருபுறம் இருக்க, ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைத்து ஜெ. வாழ்க்கை வரலாற்றை குயீன் வெப் சீரிஸாக சத்தமில்லாமல் எடுத்து முடித்து விட்டார் கௌதம் மேனன். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A latest news from B-town says that Actress Kangana Ranaut asked director Vijay to keep Jayalalitha biopic title as 'thalaivi' in all three languages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X