பட வாய்ப்புக்காக மோசமான விஷயத்தை செய்ய சொன்ன தயாரிப்பாளர்: செய்த நடிகை

By Siva

மும்பை: தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி பட போட்டோஷூட்டில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசியுள்ளார் கங்கனா ரனாவத்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் திரைத்துறையில் யாரையும் தெரியாமல் வந்து இன்று அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். அவ்வப்போது திரைத்துறையினரை விமர்சித்து பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.

இந்நிலையில் தான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார் கங்கனா. இது குறித்து அவர் கூறியதாவது,

போட்டோஷூட்

போட்டோஷூட்

பஹ்லஜ் நிஹலானி ஐ லவ் யூ பாஸ் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார். போட்டோஷூட்டிற்கு சென்றபோது உள்ளாடை எதுவும் அணியாமல் சாட்டின் ரோபை(satin robe) மட்டும் அணிந்து வருமாறு கூறினார்கள். அந்த ரோபை அணிந்து வந்து கால் தெரியும்படி போஸ் கொடுக்கச் சொன்னார்கள்.

இளம் பெண்

இளம் பெண்

நடுத்தர வயது பாஸ் மீது மோகம் கொள்ளும் இளம் பெண்ணாக நான் நடிக்க வேண்டும். அது ஒரு சாப்ட் போர்ன் கதாபாத்திரம். நான் அந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டு தேர்வானேன். ஆனால் அந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் ஓடி ஒளிந்துவிட்டேன். என் செல்போன் எண்ணை மாற்றிவிட்டேன்.

போக்கிரி

போக்கிரி

அந்த நேரத்தில் தான் நான் அனுராக் பாசுவின் கேங்ஸ்டர் மற்றும் புரி ஜெகன்னாத்தின் போக்கிரி படங்களின் ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். அந்த இரண்டு படங்களிலுமே தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் நான் கேங்ஸ்டர் படத்தை தேர்வு செய்து நடித்தேன். போக்கிரி பட வாய்ப்பை ஏற்க மறுத்த நான் பின்னர் புரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் வேறு ஒரு படத்தில் நடித்தேன்.

பாலிவுட்

பாலிவுட்

கங்கனா பஹ்லஜ் நிஹலானி படம் பற்றி தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கங்கனா ஏதாவது பேட்டி அளித்தாலே யார் தலை உருளப் போகிறதோ என்று பாலிவுட் பிரபலங்கள் பயப்படும் அளவுக்கு ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X