சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
Recommended Video
மும்பை: தலைவி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் கங்கனா ரனாவத், தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது தனது அடுத்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
தேஜஸ் என்ற டைட்டிலில் உருவாக உள்ள இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் சர்வேஷ் மேவாரா இயக்குகிறார்.
பெண் விமானியாக செம்ம ஃபிட்டாக இருக்கும் கங்கனா ரனாவத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.

ஜெயலலிதா பயோபிக்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் டைட்டிலில் உருவாகி வருகிறது. இதில், ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஆக அரவிந்த் சாமி நடித்து வருகிறார். தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

சூரரைப் போற்று எஃபெக்ட்
தலைவி படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத், தற்போது, அடுத்ததாக விமானம் ஓட்டும் பெண்ணாக 'தேஜஸ்' எனும் படத்தில் நடிக்க உள்ளார். அண்மையில், சூர்யா நடிப்பில் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி சூரரைப் போற்று படம் உருவாகி வருவதை அறிந்த கங்கனா ரனாவத் இந்த முடிவை எடுத்துள்ளாரா என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.
தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக்
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பங்கா படத்தில், ஓய்வுபெற்ற கபடி வீராங்கனையாக கங்கனா நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், வந்த சுவடே தெரியாமல் சென்று விட்டது. இந்நிலையில், தற்போது, தேஜஸ் படத்தின் தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

பயோபிக்கா?
சர்வேஷ் மேவரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக உள்ள தேஜஸ் படம் பயோபிக் என இதுவரை தெரிவிக்கவில்லை. 2016ம் ஆண்டு பெண்களும், போர் விமானங்களை ஓட்டலாம் என்ற சிறப்பு சட்டம் அமலானதை மையப்படுத்தி, ஆண்களுக்கு நிகர் ஆனவர்கள் பெண்கள், நாட்டிற்காக பல தியாகங்களை செய்த வீரப் பெண்மணிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம் என தேஜஸ் படம் குறித்து கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில்
தலைவி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் கங்கனா ரனாவத், வரும் ஏப்ரல் மாதத்துடன் அந்த ஷூட்டிங்கை நிறைவு செய்து, தேஜஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு தேஜஸ் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











