தலைவி 2ம் பாகம்… கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை!
சென்னை : தலைவி திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராக வாய்ப்பு உள்ளதாக படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ரஜத் அரோரா தெரிவித்துள்ளார்.
தலைவி இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கங்கனா ரனாவத் 'தாகத்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக தெரிகிறது. அடுத்ததாக தேஜஸ் என்ற இந்தி திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். வேறு எந்த திரைப்படங்களும் கையில் இல்லாததால் தலைவி 2ல் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

ஜெயலலிதாவின் பயோபிக்
இயக்குனர் ஏ எல் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி படத்தை இயக்கினார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள்.

கங்கனா ரனாவத்
முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதாரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த இவர்களது கதாபாத்திரம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கலவையான விமர்சனம்
இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தலைவி 2ம் பாகம்
தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா சினிமாவிலிருந்து முதல்வராகும் வரை மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா முதலமைச்சரான பின்பு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை ஒன்றாக தொகுத்து தலைவி இரண்டாம் பாகத்தை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ரஜத் அரோரா தெரிவித்துள்ளார்.

கங்கனாவிடம் பேச்சுவார்த்தை
தலைவி இரண்டாம் பாகத்திலும் கங்கனா ரனாவத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது. விமர்சன ரீதியாக தலைவி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த போதிலும் இப்படம் வசூல் ரீதியாக லாபத்தை பெற்றுத்தரவில்லை என்று கூறப்படுகிறது.

வசூலில் ஏமாற்றம்
செப்டம்பர் 10ந் தேதி இத்திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட இப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆன பிறகும் உலகம் முழுவதும் வெறும் 9.11 கோடி மட்டும் வசூலித்துள்ளது.


Click it and Unblock the Notifications











