“தலைவி“ திரைக்கு தருவதில் இழுபறி… குழப்பத்தில் தவிக்கும் படக்குழு!

சென்னை : கங்கனா ரணாவத் நடித்த தலைவி திரைப்படம் திட்டமிட்டபடி திரைக்கு தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிட்டுக்கு தயாராக இருந்த தலைவி திரைப்படம் கொரோனாவால் ரிலீசாவது தள்ளிப்போனது. இதையடுத்து செப்டம்பர் 10ந் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

திரையரங்கில் வெளியான ஒரு வாரத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். திரையரங்கு உரிமையாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் பிரச்சினை வெடித்துள்ளது.

மக்கள் மனதில் இடம்பிடித்தார்

மக்கள் மனதில் இடம்பிடித்தார்

தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து சென்றிருப்பவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. திரைப்படம் கதாநாயகியாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், பின் நாளில் அதிமுகவின் இணைந்து அரசியலில் குறிப்பிடத் தகுந்த பெயரைப் பெற்றார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர், பல போராட்டங்களைக் கடந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதன்பின்னர் தனி ஒரு பெண்ணாக இருந்து முதலமைச்சராகி, தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார். கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலம் குன்றிய அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைவி

தலைவி

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குநர் விஜய் தலைவி திரைப்படத்தை எடுத்துள்ளார். இதை விஷ்னு வர்தன் இந்துரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைக்கவுள்ளார். படத்திற்கு 'தலைவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கலைஞராக நாசர்

கலைஞராக நாசர்

மேலும் இந்த படத்தில் ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பாக்யஸ்ரீயும், எம்ஜிஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடித்துள்ளனர். முக்கியமாக கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 10ம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

தலைவி திரைக்கு தருவதில் இழுபறி.

தலைவி திரைக்கு தருவதில் இழுபறி.

இந்நிலையில், படத்தை திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை, வெளியான ஒரே வாரத்தில் ஓடிடியில் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதாக தெரிகிறது. ஓடிடி தளமோ தாமதமாக ஓடிடி தளத்திற்கு படத்தை தந்தால் தொகையை குறைத்துக்கொள்ளலாம் என்று கூறி வருகிறது. இதனால்,தலைவி திரைப்படம் திரைக்கு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X