வேற லெவல் கங்கனா...மகளிர் தினத்தில் வெளியிடப்பட்ட தலைவி புரோமோ வீடியோ
சென்னை : சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை படமான தலைவி படம் ஏப்ரல் 23 ல் ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி படத்தின் புதிய புரோமோ வீடியோவை கங்கனா நேற்று வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினத்தன்று வெளியிடப்படுவதால், மகளிர் தின வாழ்த்துக்களுடன் இந்த புரோமோ வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து பெண்களும் சிறந்தவர்களாக தான் பிறக்கிறார்கள்.ஆனால் தன்னை தலைவியாக ஏற்றுக் கொள்ள இரும்பு பெண்மணியாக இருப்பது அவசியம். விடாமுயற்சி மற்றும் வலிமையுடன் போராடும் பெண்குலத்திற்கு என வணக்கங்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த படத்திற்காக 20 கிலோ எடை கூடிய கங்கனா, பரதநாட்டியமும் கற்றுக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட உள்ள இப்படத்தின் டப்பிங் வேலைகளை சமீபத்தில் தான் கங்கனா துவங்கினார்.
Team #Thalaivi wishes you a happy women's day! @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms #GothicEntertainment #InternationalWomensDay #womenpower #IWD2021 pic.twitter.com/4KaTQFoN2a
— Kangana Ranaut (@KanganaTeam) March 8, 2021
நேற்று தலைவி புரோமோ வீடியோவை வெளியிட்ட கங்கனா இன்று, தனது முதல்கட்ட டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாகவும், 2 ம் கட்ட பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். மேலும், படத்தின் வேலைகள் முழுவதும் முடியும் நிலைக்கு வந்து விட்டதால், படக்குழுவை பிரிய போவது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











