என்னை அம்மாவா பார்த்தீங்கனா.. என் இதயத்தில இடம் இருக்கும்.. தெறிக்கும் தலைவி டிரைலர்!

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

சென்னை: அனல் தெறிக்கும்... தலைவி ட்ரெய்லர்... கண்முன் பிரதிபலிக்கும் ஜெ!

தலைவி டிரைலர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பயோபிக்

ஜெயலலிதா பயோபிக்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் தலைவி எனும் டைட்டிலில் உருவாகி உள்ளது. மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தலைவா, தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இந்த படத்தை பான் இந்தியா படமாக இயக்கி உள்ளார்.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். மீண்டும் தலைவி படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் டிரைலர் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது.

அடுத்த விருது ரெடி

அடுத்த விருது ரெடி

ஜான்சி ராணி லக்‌ஷ்மி பாய் வாழ்க்கை வரலாற்று படத்தை மணிகர்ணிகா எனும் பெயரில் இயக்கி நடித்த கங்கனா ரனாவத்துக்கு நேற்று சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகி உள்ள தலைவி படத்தின் டிரைலரை பார்த்த அவரது ரசிகர்கள் இன்னொரு தேசிய விருது ரெடியாக உள்ளது என பாராட்டி வருகின்றனர்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். காட்சிகளில் எம்ஜிஆராக தெரியும் அரவிந்த் சாமியின் குரலில் எம்ஜிஆர் தெரியாதது சற்றே ரசிகர்களுக்கு ஒரு சிறு குறையாக தெரிகிறது. ஆனால், தனது நடிப்பால் நிச்சயம் அரவிந்த் சாமி மிரட்டி உள்ளார் என்றே பாராட்டி வருகின்றனர்.

பாஞ்சாலி ஜெயா

பாஞ்சாலி ஜெயா

சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த காட்சியை டிரைலரிலேயே காண்பித்து அனைவரது கவனத்தையும் தலைவி டிரைலர் பக்கம் திருப்பி உள்ளார் இயக்குநர் விஜய். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு இது தான் நடந்தது. சேலையை பிடிச்சி இழுத்த கெளரவர்கள் கதையை முடிச்சு, கூந்தலை முடிச்சா.. அந்த மகாபாரதத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு ஜெயா.. என கங்கனா சொல்லும் இடமே கூஸ்பம்ப்ஸா இருக்கு.

யாரு காளான்

யாரு காளான்

நேத்து பெய்ந்த மழையில் முளைத்த காளான் நீ, ஆலமரத்தை அசைக்க பார்க்காத என சமுத்திரகனி பேசும் இடமும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யாரு காளான், யாரு ஆலமரம்னு காலம் பதில் சொல்லும் என கங்கனா ரனாவத் பேசும் இடம் சரவெடியாக உள்ளது.

அம்மாவா பார்த்தீங்கனா

என்னை அம்மாவா பார்த்தீங்கனா என் இதயத்தில உங்களுக்கு இடம் இருக்கும்.. என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கனா? என கங்கனா ரனாவத் வசனம் பேசுவதோடு டிரைலரை முடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளனர். அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி திரைக்கு வருகிறது தலைவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X