'நான் போதைக்கு அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ!
மும்பை: நடிகை கங்கனா, தான் போதைக்கு அடிமையாக இருந்தேன் என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் போதை பொருள் விவாகரம் தலை தூக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரா அலிகான்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நடிகைகள் சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் உள்பட 25 சினிமா பிரபலங்களின் பெயரை சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடிகை கங்கனா சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகக் கூறினார்.

மும்பை மாநகராட்சி
இதையடுத்து அவருக்கும், சிவசேனா கட்சிக்கும் மோதல் வெடித்தது. பாந்த்ரா பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரனவத்தின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாகக் கூறி, மும்பை மாநகராட்சி கடந்த சில நாட்களுக்கு முன் அதை இடித்துத் தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது.

கங்கனா போதைப் பொருள்
இதனால் ஆவேசமான நடிகை கங்கனா, மகாராஷ்ட்ர முதலமைச்சரை அவரது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சித்தார். இந்நிலையில், கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தினார் என்று கூறியிருந்தார்.

போதை அடிமை
தன்னையும் போதைப் பொருளை பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கங்கனாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே நடிகை கங்கனா, நான் போதை பொருள் அடிமையாக இருந்தேன் என்று முன்னர் அளித்த வீடியோ பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











