twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதமரின் கண்ணீர் உண்மையானதா.. பொய்யானதா ஆராய்ச்சி ஏன்… முன்னணி நடிகை கேள்வி !

    |

    சென்னை : மருத்துவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி பேசும் போது கண்கலங்கி பேசினார். இது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

    இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத், தனது முகநூல் பக்கத்தில், பிரதமர் மோடியின் கண்ணீரை நான் ஏற்றுகொள்கிறேன் என கூறியுள்ளார்

    இந்த கொரோனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தீவிரமாகுமா கொரோனா

    தீவிரமாகுமா கொரோனா

    நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் பதிவாகி வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கருப்பு பூஞ்சை தொற்றும் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    கண்கலங்கினார்

    கண்கலங்கினார்

    இந்நிலையில் கொரோனா 2ஆவது அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா 2வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என கூறும்போது கண்கலங்கினார்.

    பொய்யானதா

    பொய்யானதா

    பிரதமர் கண்கலங்கியது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது முகநூல் பக்கத்தில், கண்ணீர் உண்மையானதா அல்லது பொய்யானதா அதை ஏன் நீங்க ஆராய விரும்புகிறீர்கள். மற்றவர்களின் துக்கத்தால், வலி தாங்க முடியாத போது அக்கறை உள்ள ஒரு நபராக அவர் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    கண்ணீரை நான் ஏற்றுக்கொள்கிறேன்

    கண்ணீரை நான் ஏற்றுக்கொள்கிறேன்

    அந்த வலியை புரிந்து கொள்ள வேண்டும், அதைவிடுத்துவிட்டு,கண்ணீர் அறியாமல் நிகழ்ந்தது என்று ஒவ்வொன்றுக்கும் பிரச்சினை ஏற்படுத்துகிறீர்கள். பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்றுக்கொள்கிறேன். துக்கத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அன்புள்ள இந்தியர்களே ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் துன்பமாக மாற்றாதீர்கள், உங்கள் அணுகுமுறையை உங்கள் கண்ணோட்டத்தை மாற்றுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Kangana ranaut says about Prime Minister Narendra Modi's tears.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X