மீண்டும் சர்ச்சை பேச்சு...அடுத்த சிக்கலில் சிக்கிய கங்கனா
மும்பை : அடிக்கடி ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டவர் கங்கனா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தாலும், சர்ச்சை பேச்சுக்களால் பலரையும் அலற வைத்து வருகிறார்.
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தன்னை தானே புகழ்ந்து ட்விட்டரில் அடிக்கடி கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார் கங்கனா. அவரின் இந்த செயலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஓய்வெடுக்கும் கங்கனா
தற்போது கொரோனா பரவல் காரணமாக பல படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊடரங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள தனது வீட்டில் பொழுதை கழித்து வருகிறார் கங்கனா. அப்போது தனது அன்றாட நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகிறார்.

தள்ளிப்போகும் தலைவி
தமிழில் இவர் நடித்த தலைவி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கடுப்பான கங்கனா
அப்படி கொரோனா இரண்டாம் அலை குறித்து சமீபத்தில் கோபமாக சில கருத்துக்களை அவர் ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால் கடுப்பான கங்கனா, மிக கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இதுவும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை
கங்கனா தனது பதிவில், தற்போதுள்ள சூழலில் யாருக்கும் கோபம், மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். சூரியன் உதிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அது உங்களுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை. உங்களை தாங்கி, வளர்த்த இந்த பூமி திடீரென உக்கிரமானால் உங்களுக்கு எதுவும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்காது. அமைதியாக இருங்கள் முட்டாள்களே என குறிப்பிட்டுள்ளார்.

யார் அக்கறைப்பட போவது
மற்றொரு பதிவில், உங்களின் வேடிக்கையான பணத்திற்காக பூமி தனது அச்சில் இருந்து மாறாது. சூரியனும் அதற்காக உதிக்கவில்லை. அகண்ட பிரபஞ்சத்தில் பூமி கூட அணு போன்றது தான். இந்த பிரபஞ்சத்தில் உங்களின் வாழ்க்கை பற்றி யாருக்கு அக்கறை உண்டு? நாம் வாழ்ந்தாலும் மரணித்தாலும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். அமைதியாக உட்காருங்கள் முட்டாள்களே என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











