twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாருங்க.. இதான் பாசிசம்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மும்பை.. மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றும் கங்கனா!

    |

    மும்பை: தன்னுடைய அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து நடிகை கங்கனா ரனாவத் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    நடிகை கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

    மேலும் பாலிவுட்டில் போதை மருந்து புழக்கம் தாரளமாக இருப்பதாகவும் பிரபலங்கள் பலருக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி வந்தார்.

     நான் சீனியில் செய்த கடல்.. எக்குத்தப்பான அழகா இருக்கே.. இணையத்தை திணறவிடும் இன்ஸ்டாகிராம் பிரபலம்! நான் சீனியில் செய்த கடல்.. எக்குத்தப்பான அழகா இருக்கே.. இணையத்தை திணறவிடும் இன்ஸ்டாகிராம் பிரபலம்!

    கடுப்பான சிவசேனா

    கடுப்பான சிவசேனா

    இதனை தொடர்ந்து அண்மையில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார் கங்கனா ரனாவத். இதனால் கடுப்பான சிவசேனா கட்சி நடிகை கங்கனா ரனாவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கும் கங்கனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

    இடித்தார்கள்

    இடித்தார்கள்

    இந்தநிலையில் மும்பை மாநகராட்சியினர் தன்னுடைய கட்டடத்தை அளந்திருப்பதாகவும், நாளை என்னுடைய கட்டத்தை இடிப்பார்கள் என்றும் டிவிட்டரில் கூறியிருந்தார் நடிகை கங்கனா. அவர் சொன்னப்படியே அவரது கட்டடத்தை மும்பை மாநகராட்சியினர் இன்று இடித்தனர்.

    காலை 11 மணிக்கு

    காலை 11 மணிக்கு

    கங்கனாவின் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத வகையிலான கட்டுமானம் நடைபெற்றுள்ளதாக கூறி புல் டோசர்களை வைத்து இடித்துள்ளது. போலீசாருடன் பி.எம்.சி எச்-வெஸ்ட் வார்டு அதிகாரிகளின் குழு ஜே.சி.பி.க்கள், புல்டோசர்கள் மற்றும் கனரக வாகனங்களுடன் கங்கனாவின் அலுவலகத்தை காலை 11 மணிக்கு இடிக்கத் தொடங்கினர்.

    பாகிஸ்தான்..

    பாகிஸ்தான்..

    இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனாவின் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டியுள்ள நடிகை கங்கனா ரனாவத், தன்னுடைய அலுவலகம் இடிக்கப்படும் படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் பாகிஸ்தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா ரனாவத், #deathofdemocracy என்றும் தெரிவித்துள்ளார்.

    பாபரும் அவருடைய ஆர்மியும்

    பாபரும் அவருடைய ஆர்மியும்

    மேலும் தன்னுடைய கட்டடங்கள் இடிக்கப்படும் மேலும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ள கங்கனா, பாபர் மற்றும் அவருடைய ஆர்மி என தெரிவித்துள்ளனர். மற்றொரு டிவிட்டில், "நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை, என் எதிரிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள், இதனால்தான் நம் மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    கோபத்திற்கு காரணம்

    கோபத்திற்கு காரணம்

    ஏற்கனவே கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியதற்காகதான் சிவசேனா தலைவர்களின், குறிப்பாக சஞ்சய் ரவுத்தின் கோபத்திற்கு ஆளானார். அந்த டிவிட்டுதான் இதுவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

    இதுதான் பாசிசம்

    இதுதான் பாசிசம்

    நடிகை கங்கனா ரனாவத் தனது மற்றொரு டிவிட்டில் "எனது வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் எதுவும் இல்லை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா காரணமாக எந்த இடிப்பையும் செய்யக்கூடாது என அரசாங்கம் தடை செய்துள்ளது, பாலிவுட் பாருங்கள் இப்போது இதுதான் பாசிசம் போல் தோன்றுகிறது" என பதிவிட்டுள்ளார்.

    Recommended Video

    Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply
    பழி வாங்கும் செயல்

    பழி வாங்கும் செயல்

    கங்கனா ரனாவத்தின அலுவலக கட்டடம் இடிக்கப்பட்ட சம்பவத்தை, அம்மாநில அரசின் பழி வாங்கும் செயலாக பார்க்கிறார்கள் கங்கனாவின் ரசிகர்கள். கங்கனா பதிவிடும் ஒவ்வொரு டிவிட்டும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து வருகிறது. ரசிகர்கள் பலரும் கங்கனாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Kangana says There is no illegal construction in my house, also government has banned any demolitions in Covid till September 30, Bollywood watch now this is what Fascism looks like. She also says Mumbai is POK now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X