twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சும்மா விடமாட்டேன்.. இடிக்கப்பட்ட அலுவலகம்.. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் நோட்டீஸ்!

    |

    மும்பை: பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டது என மும்பை மாநகராட்சிக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    கடந்த வாரம் நடிகை கங்கனா ரனாவத் மும்பை வந்திருந்தார். எதிர்ப்புகளை மீறி அவர் மும்பை வந்த நிலையில், அவரது அலுவலக கட்டடம் அத்துமீறி கட்டப்பட்டதாகக் கூறி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் அதனை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மும்பை நீதிமன்றத்தில் கங்கனா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கட்டடத்தை இடிக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டனர்.

     வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு வந்தது கற்கள்.. ஆன்லைனில் அதிரடி மோசடி.. பிரபல இசை அமைப்பாளர் புகார்! வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு வந்தது கற்கள்.. ஆன்லைனில் அதிரடி மோசடி.. பிரபல இசை அமைப்பாளர் புகார்!

    ஆதரவு குரல்

    ஆதரவு குரல்

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களையும் எதிர்த்து, பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசத்துக்கு எதிரான குரலாக கங்கனா ரனாவத் ஒலித்து வந்தார். தொடர்ந்து, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடினார்.

    சிவசேனாவுடன் பிரச்சனை

    சிவசேனாவுடன் பிரச்சனை

    மேலும், பாலிவுட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கும், போதைப் பொருள் விநியோகத்திற்கும் மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சி தான் பொறுப்பு என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர். அதன் பின்னர், சிவசேனா கட்சியினருக்கும் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் நேரடியான மோதல்கள் நிலவின.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    ஹிமாச்சலில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த கங்கனா ரனாவத்தை, முடிந்தால் மும்பை வந்து பாரு என சிவசேனா கட்சியினர் உசுப்பி விட, அவரும், நான் அதுக்கெல்லாம் பயந்த ஆள் கிடையாது என ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்புடன் மும்பை வந்து சில நாட்கள் தங்கி இருந்து பின்னர் மீண்டும் ஹிமாச்சல் கிளம்பி விட்டார்.

    கவர்னருடன் பேச்சு

    கவர்னருடன் பேச்சு

    மேலும், மகாராஷ்ட்ரா அரசு குறித்தும், தான் மும்பை வருவதை தடுக்கும் விதமாக, தனது அலுவலக கட்டடத்தை அத்துமீறி எந்தவொரு முன்னறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் இடித்துத் தள்ளியது குறித்தும், மகாராஷ்ட்ரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி இடம் நேரில் சந்தித்து கங்கனா விளக்கி இருந்தார்.

    2 கோடி

    2 கோடி

    இந்நிலையில், தற்போது மும்பை மாநகராட்சிக்கு எதிராக 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தனது கட்டடம் முறைகேடாக கட்டப்படவில்லை என்றும், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பழிவாங்கும் நடவடிக்கையாகவே அதனை தகர்த்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் கங்கனா ரனாவத்.

    English summary
    After finished her short trip to Mumbai, now Kangana Ranaut issues a notice to BMC for the illegal demolition of her office and asking 2 crore rupees as damage compensation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X