தலைவி ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகலை... வதந்திகளை நம்பாதீங்க... கங்கணா பளீச்

மும்பை : நடிகை கங்கணா ரணாவத் ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கங்கணா ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

நடிகை கங்கணா ரணாவத் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள படம் தலைவி. முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த பல்வேறு செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வதந்திகளை நம்பாதீங்க

வதந்திகளை நம்பாதீங்க

இதனிடையே படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கங்கணா ரணாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்க்ததில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

திரையரங்கில் ரிலீஸ்

திரையரங்கில் ரிலீஸ்

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் தலைவி படத்தை ரிலீஸ் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தலைவி படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததையும் அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X