எனக்கு ரொம்ப சவாலா இருந்துச்சு.. அந்த மாதிரி நடிக்க.. கங்கனாவின் நெகிழ்ச்சி!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் ட்ரைலர், கங்கனா ரநௌத்தின் பிறந்த நாளான நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுட்டுள்ளார்.
தலைவி ஏப்ரல் 23ந் தேதி வெளியாக உள்ளதால், இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதாவின் பயோபிக்
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரநௌத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

அரவிந்த்சாமி
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது படக்குழு. இது இணையத்தில் படு வேகமாக பரவி அரவிந்த்சாமி பார்ப்பதற்கு உண்மையில் எம்.ஜி.ஆர் போல இருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆர்.எம்.வீரப்பனாக
எம்.ஜிஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமியின் அருகில் கண்ணாடியுடன் சமுத்திரக்கனி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

நாளை ட்ரைலர்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஒரு மேஜிக்கல் ஜோடியாகவே இருந்து இருக்கிறார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற ஜோடியை நாம் பார்க்கவே முடியாது. இப்படத்தின் ட்ரைலர் கங்கனா பிறந்த நாளான நாளை வெளியாக உள்ளது.

ஜெயா என்றென்றும் உங்களுக்காக
இந்நிலையில் இப்படம் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில். இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் எதிர்கொண்ட ஒரே சவால் 20 கிலோ எடையை ஏற்றுவதும், சில மாதங்களுக்கு பிறகு எடையை குறைப்பதும் தான் என்று கூறியுள்ளார். இன்னும் சில மணி நேரங்களுக்குள் அந்தக் காத்திருப்பு முடிய உள்ளது. 'ஜெயா என்றென்றும் உங்களுக்காக' என கூறி படத்தின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











