Kangana: அறிவுக்கெட்ட முட்டாள்கள்.. அரை டவுசருடன் பெண்கள் கோயிலுக்கு செல்வதா? கங்கனா ரனாவத் காட்டம்!

மும்பை: கோயிலுக்குள் சில பெண்கள் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் சினிமாவில் படு கவர்ச்சியாக நடித்தாலும், கோயில்களுக்கு செல்லும் போது சேலை மற்றும் சுடிதார் அணிந்து தான் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்து மதத்தை தீவிரமாக கடை பிடித்து வரும் கங்கனா ரனாவத் தற்போது இப்படியொரு ட்வீட் போட்டிருப்பது பல விவாதங்களை கிளப்பி உள்ளது.

Kangana Ranaut slams few girls wear short dress at Temples

மீண்டும் ட்விட்டரில் கங்கனா ரனாவத்:

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ட்வீட்களை போட்டு கலவரங்களை உண்டு பண்ணி வருகிறார் என இதற்கு முன் இருந்த ட்விட்டர் நிர்வாகம் அவரது ட்விட்டர் கணக்கையே முடக்கி நடவடிக்கை எடுத்தது.

ஆனால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், காசு கொடுத்தால் யார் வேண்டுமானால் ப்ளூ டிக் வாங்கிக் கொண்டு சேரலாம் என்கிற நடைமுறையை அமல்படுத்திய நிலையில், மீண்டும் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்.

கோயிலுக்குள் அரைகுறை ஆடை:

பாரம்பரிய மிக்க இந்து கோயிலுக்குள் சில பெண்கள் மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நிகி உனியால் எனும் நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்தியில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut slams few girls wear short dress at Temples

அதனை ரீட்வீட் அடித்த நடிகை கங்கனா ரனாவத் இன்னைக்கு கன்டென்ட் கிடைத்து விட்டது என அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள் எப்படி பெண்கள் வரலாம் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், தான் ஒரு முறை வாடிகன் சர்ச்சுக்கு சென்ற போது ஷார்ட்ஸ் அணிந்து சென்று விட்டேன். அங்கே என்னை அவர்கள் உள்ளே விடவே இல்லை என்றும் அது போன்ற நடவடிக்கைகள் இங்கேயும் வரவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

கோயில்களில் மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு இப்படி அரைகுறையாக வரக்கூடாது என்கிற பொது அறிவு கூட இல்லாத அறிவு கெட்ட முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிகளை கோயில் நிர்வாகங்கள் கொண்டு வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கொதித்தெழுந்துள்ளார்.

எல்லாம் நீங்க பண்ண வேலை தான்:

சினிமாவில் படு செக்ஸியாக ஆடைகளை அணிந்து கொண்டு பல இளம் பெண்களை நீங்கள் கெடுத்த வேலை தான் இப்படி பொதுவெளியில் இளம் பெண்கள் அரை குறை ஆடைகளுடன் அலைகின்றனர் என்று ரசிகர்கள் கங்கனா ரனாவத்தை விளாசி வருகின்றனர்.

மேலும், யார் எந்த ஆடையை அணிய வேண்டும் என்கிற உடை கட்டுப்பாட்டை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் என்றும் உங்கள் ஆடை குறித்து யாராவது சொன்னால் அதை நீங்கள் கேட்பீர்களா? என்றும் விளாசி வருகின்றனர்.

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தியில் எமர்ஜென்ஸி எனும் டைட்டிலில் இந்திராகாந்தியாக நடித்தும் இயக்கியும் வருகிறார் கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X