Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை டாப்சி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சிக்கு ஆதரவாக நடிகை ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட சிலரே குரல் கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் வரித் திருடர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட கறுப்பு பணப் புழக்கமும் கரை புரண்டு ஓடுதுன்னு நடிகை கங்கனா ரனாவத் வெளுத்து வாங்கி உள்ளார்.

பெரிய மோசடி
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை டாப்சி. அதே போல பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படங்களும் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. நேற்று திடீரென இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

650 கோடிக்கு கணக்கு இல்லை
வருமான வரித்துறை சோதனையின் முடிவில் சுமார் 650 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சரியான ஆவணங்கள், பில்களுக்கு பதிலாக ஏகப்பட்ட போலி ஆவணங்களையே வைத்துள்ளனர் என்றும் இது தொடர்பான தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பாலிவுட்டை அதிர வைத்துள்ளனர்.

யாருமே வாய் திறக்கல
வழக்கம் போல இந்த விவகாரத்திலும் பாலிவுட்டின் முன்னணி நாயகர்கள் யாருமே வாய் திறக்கவில்லை. வருமான வரித்துறை சோதனை என்ன நோக்கத்தோடு நடைபெற்றது என்றும், சட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரியாத நிலையில், யாருமே வாய் திறக்கவில்லை. நடிகை ஸ்வரா பாஸ்கர் மட்டும் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

வெளுத்து வாங்கும் கங்கனா
சும்மாவே டாப்சிக்கும் கங்கனாவுக்கும் ஆகாது. தன்னுடைய இடத்தை டாப்சி பறித்துக் கொண்டார் என ஏற்கனவே பேசி பரபரப்பை கிளப்பி இருந்தார். மேலும், பாலிவுட்டில் நிலவி வரும் மாஃபியா குறித்தும் வெளிப்படையாக பேசி பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். இந்நிலையில், இப்படியொரு விஷயம் கிடைக்க இருவரையும் சும்மா ட்வீட்களால் வச்சு விளாசி வெளுத்து வாங்கி வருகிறார்.

மீடூ புகார்கள்
ஐடி ரெய்டு நடத்தப்பட்ட கேவான் ஏஜென்ஸி மற்றும் பாண்டம் தயாரிப்பு நிறுவனம் தான் அதிகளவிலான மீடூ புகார்களை சந்தித்துள்ளது என்றும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடா வெட்டி வருகிறார் கங்கனா ரனாவது. ஏற்கனவே பாலிவுட் நடிகை பாயல் கோஷ் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.
|
கறுப்பு பண கொள்ளையர்கள்
நடிகை டாப்சியும் அனுராக் காஷ்யப்பும் வெறும் வரி ஏய்ப்பு திருடர்கள் மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் கறுப்பு பணத்தை பறிமாற்றி உள்ளனர். பல நூறு கோடிகளில் கறுப்பு பணம் விளையாடி இருக்கிறது. யார் பெயரில் கணக்குகள் பரிமாற்றப்பட்டுள்ளது என முழு விசாரணையையும் போலீசார் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கொதித்தெழுந்துள்ளார்.
|
ராணுவ பயிற்சி
தேஜாஸ் படத்தில் போர் விமானியாக நடிக்க உள்ள நடிகை கங்கனா ரனாவத், அதற்காக எடுத்துள்ள ராணுவ பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். வெறுமனே யுனிஃபார்ம் போட்டுக் கொண்டு நடிப்பதில் பொருளல்ல, அவர்களின் வலியை உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி வெளியாகிறது.