தலைவி.. ஜெ. மாதிரி மாற சொன்ன விஜய்.. அதுக்காக கங்கனா என்ன சாப்பிட்டு ரிஸ்க் எடுத்திருக்காங்க பாருங்க

தலைவி படத்துக்காக கங்கனா ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Thalaivi First Look | Kangana Ranaut | A.L. Vijay

சென்னை: தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று நடிப்பதற்காக நிறைய ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நிச்சயம் கங்கனா அந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார் என விமர்சனங்களும் எழுந்தன.

பயிற்சி

பயிற்சி

ஆனாலும் மனம் தளராமல் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கதாபாத்திரத்துக்கு தயாரானார் கங்கனா. பரதநாட்டியம் கற்றார், தமிழ் பேச கற்றுக் கொண்டார். ஜெயலலிதா போன்று நடிப்பதற்காக பல்வேறு பயிற்சிகளை அவர் மேற்கொண்டார்.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

சமீபத்தில் தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் கங்கனாவின் தோற்றம் வழக்கம் போலவே சர்ச்சையில் சிக்கியது. ஜெயலலிதா போன்ற தோற்றத்தைக் கொண்டு வர அவர் கடினமாக உழைத்திருப்பது வெளிப்படையாகவேத் தெரிந்தது. மேக்கப்பையும் தாண்டி அவர் சற்று எடை கூடியிருப்பதையும் பார்க்க முடிந்தது.

அதிக சாப்பாடு

அதிக சாப்பாடு

இந்நிலையில், தலைவி படத்திற்காக தான் எடுத்துக் கொண்ட கடின முயற்சிகள் பற்றி பேட்டியொன்றில் தெளிவாகப் பேசியுள்ளார் கங்கனா. அதில் அவர், ‘தனது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஹார்மோன் மாத்திரைகள்

ஹார்மோன் மாத்திரைகள்

குறிப்பாக வயிறு மற்றும் தொடைகளைச் சுற்றிலும் தோற்றத்திற்காக தேவைப்பட்டதால் அதற்கேற்ற உணவுகளை சாப்பிடத் தொடங்கியதாகவும், லேசான அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும் கங்கனா கூறியுள்ளார்.

6 கிலோ எடை

6 கிலோ எடை

இயக்குநர் விஜய், ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டுமென கேட்டுக் கொண்டதால் இவற்றைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். தலைவி படத்திற்காக கங்கனா 6 கிலோ எடை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடுமையான உடல் மாற்றம்

கடுமையான உடல் மாற்றம்

மேலும், "ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடனக் கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார்.

ஸ்டெராய்டுகள்

ஸ்டெராய்டுகள்

அரசியலுக்கு பின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதெயெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மத்திரைகளை எடுத்துக் கொண்டேன்" என அப்பேட்டியில் கங்கனா தெரிவித்துள்ளார். தலைவி படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X