என் உடம்புல கொரோனா பார்ட்டி பண்ணுது.. அதை நான் அழிக்காம விட மாட்டேன்.. நடிகை கங்கனா ரனாவத் சவால்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Kangana வுக்கு கொரோனா! அதை அசால்டாக சொன்ன Kangana

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து தொடர்ச்சியாக ட்வீட்களை போட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முழுமையாக முடக்கியது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகி இருக்கும் கங்கனா ரனாவத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார்.

கங்கனாவுக்கு கொரோனா

கங்கனாவுக்கு கொரோனா

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தற்போது தெரிவித்துள்ளார்.

கண்ணு எரியுது

கண்ணு எரியுது

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. அதனால், சொந்த ஊரான ஹிமாச்சலுக்கு திரும்பியதும் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இன்று எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. உடனடியாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

கொரோனா பார்ட்டி பண்ணுது

கொரோனா பார்ட்டி பண்ணுது

என் உடலில் கொரோனா என்ன பார்ட்டி பண்ணுதுன்னு எனக்கு தெரியவில்லை. ஆனால், அது ஆட்டம் போட இடம் கொடுக்க மாட்டேன். அதனை அழித்து விடுவேன் என நடிகை கங்கனா ரனாவத் போட்டுள்ள பதிவு ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இடம் கொடுக்கக் கூடாது

இடம் கொடுக்கக் கூடாது

கொரோனா சாதாரண வைரஸ் நோய் தான். அதை பார்த்து பயந்து அது நம்மை ஆட்கொள்ள இடம் கொடுக்கக் கூடாது என்றும் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.

கங்கனா மீது வழக்கு

கங்கனா மீது வழக்கு

மேற்கு வங்க கலவரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ச்சியாக நடிகை கங்கனா ரனாவத் ட்வீட் போட்ட நிலையில், ட்விட்டர் நிர்வாகம் ஒரே அடியாக அவரது கணக்கை முடக்கியது. மேலும், மேற்கு வங்கத்தில் சமூக ஆர்வலர்கள் சிலர் கங்கனா மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

ஆக்ஸிஜன் தேவையில்லை

ஆக்ஸிஜன் தேவையில்லை

இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் ஏதும் தேவையில்லை என்றும், டெல்லி அரசு ஆக்ஸிஜனை உரிய முறையில் கையாளவில்லை என்பதாலே இந்த பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் ஆக்ஸிஜனை திருட்டுத் தனமாக பதுக்கியும் வைத்து வருகின்றனர் என சமீபத்தில் கங்கனா போட்ட குற்றச்சாட்டு பதிவும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X